Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

111. தலைவர் தொண்டருக்குப் பணிவது.

  • கலங்கரை விளக்கு கண்ணுக்குத் தெரியாமற்போகாது.
  • தலைவர் பதவி வகிப்பவர்
  • தலைவருக்குரிய அம்சமிருந்து தலைமைப் பதவி வகிப்பவர் பெரியவர்.
  • அம்சமுள்ள தொண்டர் தலைவர் கண்ணில்பட நாளாகாது.
  • கேஸ் கட்டைப் பிரித்தவுடன் பகவானுக்கு ஓரிடத்தில் வெளிச்சம் தெரிந்தது.
    அதை விரலால் சுட்டிக் காட்டினார். கோர்ட்டார் அதைக் கேட்டு ஏற்றனர்.
  • கேஸ் ஜெயித்தது. 1920-இல் இலட்ச ரூபாய் பீஸ் பெற்றார் வக்கீல்.
  • சூட்சுமப் பார்வைக்கு விஷயம் உள்ள இடம் ஜோதியாகத் தெரியும்.
  • நேரு சிறுவனாக இருந்தபொழுது அன்னை அதுபோன்ற ஜோதியை அவர் படத்தில் கண்டு “எதிர்காலப் பிரதமர் இவர்” என்றார்.
  • அப்பொழுது மோதிலால், பிரசாத், ராய், ராஜாஜி, ஆசாத், பட்டேல் போன்ற தலைவரிடையே நேரு இளைஞன், கேட்ட சாதகர் எவரும் நம்பவில்லை.
  • ஜோதியுள்ள தொண்டர் நேரத்தில் தலைவராவார்.
  • ‘தலைமை’ ஜோதியாகத் தெரியும். தெளிவான இலட்சியமாகவும் தெரியும். நடையுடை பாவனையிலும் தெரியும்.
  • செயலிலும், செயல் முறையிலும் தெரியும்.
  • கூட்டம் அதிகமான பொழுது தலைவரருகே தற்செயலாய் அதுபோன்ற தொண்டர் வருவார்.
  • குரல் கணீரென இருந்தால் தலைவர் நிமிர்ந்து பார்ப்பார்.
  • சந்தர்ப்பம் தலைவரை தொண்டருக்கு மாலை போடச் செய்யும்.
  • பலர் தம்மையறியாமல் செலுத்தும் மரியாதையிலும் ‘தலைமை’ விளங்கும்.
  • கோஷம் எழுப்பினால் தனித்த குரல் “தலைமை”யிடமிருந்து வரும்.
  • ஜாதகம் பேசும்.
  • சூட்சுமமானவர்க்கு நடப்பவை அனைத்தும் “ஜாதகமே”.
  • “நல்ல பெயரும்” எடுத்துக்காட்டும்.
  • அம்சம் மிகப் பெரியதானால் “தலைமை” கெட்ட பெயரும் பெறும்.
  • பேச்சுத் திறமை வெளிப்படுத்தும்.
  • தலைவர் அவசியமின்றி தொண்டருக்குப் பணிய முன்வருவார்.
  • அம்சம் அளவு கடந்த பெரியதானால் முதல் நாளிலிருந்து ஸ்தாபனம் அவரைப் பராமுகமாகப் புறக்கணிக்கும்.
  • பார்த்தவுடன் “நீயே தலைவன்” என அனைவரும் கூறுவர்.
  • தண்டித்தால் தண்டித்த தலைவராக தண்டனை பெற்றவர் தலைக்குமேல் கைகுவித்து வணக்கம் செய்யும் தலைவர் எதிர்காலத் தொண்டனை பெரும் தலைவராக்குபவர்.
  • தலைவர் தொண்டருக்குப் “பணியும்” நேரம் வருவது தொண்டருக்குப் பூரண யோகம் பலிக்கும் எனக் கூறுகிறது.

******

ஜீவிய மணி

பிரம்மம் சிருஷ்டியுள் வர முயல்வது இறைவன் வரும் தருணம்.

*********



book | by Dr. Radut