Skip to Content

02. பிறரை அவமானப்படுத்தும் பெருந்தகை

பிறரை அவமானப்படுத்தும் பெருந்தகை

  • உயர்ந்தவன் உயர்ந்த முறையில் உலகை உயர்த்துவான்.
  • தாழ்ந்தவன் தன் நிலைக்குத் தரணி வர ஏங்குவான்.
  • உயர்ந்ததும், தாழ்ந்ததும் உறவாடுவது உலக வாழ்வு.
  • தாழ்ந்தவன் உயர்ந்தவனுக்குச் சமமாக அவனை அவமானப் படுத்துவான்.
  • கணவன் ஏழையானால், மனைவி இதைச் செய்வதுண்டு.
  • மனைவி மட்டமானால், கணவனை உயர்ந்த இடத்தில் மறுப்பாள், மட்டம் எனக் கூறுவாள்.
  • அவமானப்படுத்தித் தன் மானத்தை உயர்த்த விரும்புபவர் தவறாது அவமானப்படுத்துவதில் அளவு கடந்து ஜெயித்து, அபரிமிதமாக மகிழ்வர். அடுத்த கட்டத்தில் அர்த்தமற்றவரிடம் அதிகக் கொடுமையை அசிங்கமாக, ஆபாசமாக அனுபவித்துத் தொடர்ந்து அழிவர்.
  • கணவனோ, மனைவியோ இக்கொடுமையை அடுத்தவருக்குத் தவிர்க்க, ஓயாது ஒழியாது ஒரு கணம் தாமதியாது கெட்டதை நல்லது எனக் கூற கற்க வேண்டும்.
  • இப்படிச் செய்யும் பாவம், உயர்ந்த புண்ணியம்.
  • அந்தஸ்து குறைவான சம்பந்தம் அசிங்கத்தை ஆபாசமாக்கும்.
  • வாழ்வின் கொடுமை அன்னையின் இனிமையாகும் வழி — அபத்தமான கடுமை. திட்டுவது பலன் தரும், பெறுபவருக்குப் புண்ணிய அருள் சேரும்.
    அன்னை கூறியதை அறியும் வகையிது.

******



book | by Dr. Radut