Skip to Content

01. நெகிழ்ந்த நட்பின் நிலையான சிறப்பு

நெகிழ்ந்த நட்பின் நிலையான சிறப்பு

  • பணிந்து செய்யும் சேவை பவ்யம் தரும் — பணியாளனுக்குரியது.
  • உடன் பிறந்தது ரத்த பாசம் — ஓரளவு இனிக்கும், நேரத்தில் உயிரைக் கொடுக்கும், நேரம் தவறினால் உயிரை எடுக்கும்.
  • தாய்ப்பாசம் நிகரில்லாதது — விலக்கான நேரம் விதி தலைகீழே செயல்படும்.
  • தாயின் இனிமை பெற்ற தனயன் உள்ளம் தாயின் துரோகத்தை விஸ்வாசமாக்கும்.
  • குருவின் ஆசீர்வாதம் அன்னையையும், பிதாவையும் அகிலத்தையும் கடந்தது. விலக்காக அனந்தனையும் கடந்தது. குருவின் கருணை, இறைவனின் அருள்.
  • கணவன்—மனைவி கருத்தால் உயர்ந்து, காதலால் மலர்ந்து, காலத்தைக் கடந்து, காலனைத் திருவுரு- மாற்றும் தகைமை பெற்றவர். அவருக்கு ஈடு அவரே, அவர் தகைமை இணையற்றது.
  • ஷேக்ஸ்பியரின் ரோஸலிண்ட் அற்புதமானவர். Taming the Shrew கேதரீன் எதிரான குணத்திற்கு இணை- யற்றவள். சண்டிகேசியை மனைவியாய் பெற்ற இளைஞருக்கு ஷேக்ஸ்பியரின் கேதரீன் சிறந்த உதாரணம்.
    வெற்றி நிச்சயம் — கொடுமை இனிமையாகும் என நடக்க மனம் வருமா?
    மனைவி மாசுமறு அற்றவள் — அவளுக்கேற்ற treatment அவளை அற்புதமாக்கும்.

******



book | by Dr. Radut