Skip to Content

09. அஜெண்டா

அஜெண்டா

பவர் முதலில் — என்பது உண்மை. சத்திய ஜீவனை விவரிக்கின்றார்

Volume 10, page 10

  • உடல், வாழ்வு, மனம், ஆன்மா என்பவை மனித அமைப்பு.
  • முதலில் உடல் செயல்படுகிறது. செயல்படத் தெரிவது பவர்.
  • விறகு உடைப்பதானாலும், எழுதுவதானாலும் மனிதன் முதலில் செய்கிறான்.
  • விளையாட்டு முதற்கொண்டு செய்வது முதலில், அறிவது பிறகு.
  • எனக்குச் செய்யத் தெரியும், சொல்லத் தெரியாது என்பார்கள்.
  • நன்றாகப் பாடுபவர்களை எப்படிப் பாடுகிறீர்கள் எனக் கேட்டால், எனக்குப் பாடத் தெரியும். எப்படி எனச் சொல்லத் தெரியாது. நான் பாடுவதைப் பார்த்து மற்றவர் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள்.
  • பகவானுக்குத் தான் அவதாரப் புருஷர் எனத் தெரியாது.
    பெரிய அம்சம் — தலைமை, மேதாவிலாசம், ஆன்மீகம் — எதுவும் முதலில் தெரிவதில்லை. நாள் போகப்போகத் தெரியும்.
  • மந்திரிப் பதவியை இழந்து வருமானத்திற்கு என்ன செய்யலாம் எனப் பலரையும் கேட்டவர் ஆரம்பித்த கல்லூரி இருபது ஆண்டில் 20,000 மாணவர்களை உடையது.
    அவருக்கு நிர்வாகத் திறமை அதிகம்.
    தனக்குத் திறமையுண்டு என அவருக்குத் தெரியவில்லை.
    பிறருக்கும் தெரியவில்லை.
    செய்த காரியம் வெற்றி பெற்றபின் அனைவருக்கும் தெரியும்பொழுது, தானும் தன்னைப் பற்றித் தெரிந்து கொள்கிறார்.
    இதுவே எல்லோர்க்கும் உரிய சட்டம்.
    சத்திய ஜீவனுக்கும் இதுவே சட்டம்.
  • முதலில் பவர் பெற்றால் காரியம் வெற்றி பெறும்.
  • பவர் முதலில் வெளிவராமல் அறிவு வெளிப்பட்டால் கேலி செய்வார்கள்.
  • அன்பு வெளிப்பட்டால் ஆபத்து.
  • ஏசுநாதர் உலகுக்கு அன்பைக் கொண்டு வந்தார்.
  • அதைக் காப்பாற்றும் திறமை, பவர் அவரிடமில்லை.
  • பகவான் சத்திய ஜீவிய தரிசனம் பெற்றபின் அவருக்கு அரசியலால் ஆபத்து 1938 வரை தொடர்ந்தது.
    சத்திய ஜீவியம் அவருக்குப் பாதுகாப்பு அளித்தது.
    அவருக்கு ஆபத்து விளைவிக்க முயன்றோருக்கு ஆபத்து வந்து பகவானுக்குரிய ஆபத்து விலகியது.
  • கிளன்டோமான் முறையில் குழந்தைகட்கு A, B, C, D சொல்லித் தராமல் CAT, BAT, MAT எனக் கற்பிக்காமல் This is a big table போன்ற வாக்கியங்களை flash card -இல் காட்டிப் பயிற்றுவித்தால் எழுத்து, ஸ்பெல்லிங், உச்சரிப்பு, எழுத தானே வருவது முதலில் பவர் வருவதாகும்.
  • நம் அனுபவம் இதுவே.
  • நாம் இதைக் கவனிப்பதில்லை.

*******

ஜீவிய மணி
 
அடுத்தவர் நம் நியாய மனப்பான்மையைப் பாராட்டும் அளவுக்குப் பழகுவது பக்குவம்.
 



book | by Dr. Radut