Skip to Content

08. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

101. ஒரு நிமிஷம் போக ஒரு மணியாகிறது.

  • ஒரு மணி ஒரு நிமிஷமாவது காலம் – 1) ஆசையால் அதன் அக்கறையால் 2) மனத்தைக் கடந்து ஆத்மாவையடைவதால் – பறப்பது.
  • நாம் மனிதன் என்பதால் மனத்தில் மனத்தால் வாழ்கிறோம்.
  • மனத்திலிருந்து கீழே உடலுக்கு வரலாம், உயிருக்கு வரலாம்.
  • எழுத்துக் கூட்டி வாசிப்பவர் நான்கு அல்லது ஐந்து பக்கம் வாசிப்பதைக் கேட்க பொறுமை வேண்டும்.
  • நாம் மனத்திலும் வாசிப்பவர் உடலிலும் இருப்பதால் அவர் வாசிப்பதைக் கேட்பது நாம் உடலிலிருந்து செயல்படுவதாகும்.
  • மனம் உயர்வதால் காலம் வேகமாகப் போகும்.
  • மனம் தாழ்ந்து, உடலையடைவதால் காலம் மெதுவாகப் போகும்.
  • ஆன்மா விழிப்பதால் காலம் வேகமாகவும், ஆன்மா ஆழ்ந்து உடலில் சென்று விழிக்க முயல்வதால், காலம் மெதுவாகவும் போகும்.
  • இந்த இரண்டும் சாதாரண வாழ்வில் நடப்பதில்லை. அரிதாகவும் நடப்பதில்லை. இது நடப்பது ஒருவர் யோக வாய்ப்புப் பெறுவதாகும்.
  • எளிய மனிதனுக்கு யோக வாய்ப்பு, பூரண யோக வாய்ப்பு எளிதில் எழுவதில்லை.
  • இதுபோன்ற நிகழ்ச்சிகள் யோக வாய்ப்பைக் குறிக்கும்.
  • காலம் வேகமாகப் போவது யோக வாய்ப்பு.
  • காலம் மெதுவாகப் போவது பூரண யோக வாய்ப்பு.
  • யோக மையம் மனத்திலிருந்து, ஆழத்திற்குப் போவது யோகம் பூரண யோகமாவது.
  • காலம் வேகமாகப் போவதில், அன்பன் தன்னை மறந்தால் அது பூரண யோக வாய்ப்பின் அறிகுறி.
  • வாய்ப்பு,
    1. சிறியதாகவோ, பெரியதாகவோ இருக்கும்.
    2. உடனே பலிப்பதாகவோ, மெதுவாகப் பலிப்பதாகவோ இருக்கும்.
    3. காலம், இடத்தை வற்புறுத்தும் - காரியம் நடக்கும்.
      காலம் உள்ளே போய் தன்னை மறந்து, ஆத்ம விழிப்பு தரும்.
    4. காலம் தரும் ஆத்ம விழிப்பு, இடம் தரும் ஆத்ம விழிப்பு, மனம் தரும் ஆத்ம விழிப்பு வேறுபட்டிருக்கும்.
    5. இவற்றைக் கடந்த ஆத்மாவே விழிப்பது வேறு.
    6. அருள் தரும் ஆத்ம விழிப்பு வேறு.
    இவற்றைப் பாகுபாடு செய்து அறிவது ஆத்ம ஞானம் யோக ஞானமாவது.
  • நாம் செய்யும் யோகம் மனித முயற்சி. ஆத்மாவே முன்வந்து செய்யும் யோகம் அருளின் சாயல் பெற்றிருக்கும். அந்த ஆத்ம ஞானம், நடைமுறைச் செயலில் யோக ஞானமாவது வாழ்விற்குப் பெரிய வாய்ப்பு.
  • உலகம் ஆத்ம விழிப்புள்ள மனிதனை மனிதனாகக் காணும். மற்றவர் போல் நடக்க வேண்டும் என எதிர்பார்க்கும்.

*********

ஜீவிய மணி
 
சொல்லையும் அசைவையும் இழந்த அழைப்பு, ஜீவன் இறைவனை நோக்கித் திரும்புவது.
 



book | by Dr. Radut