Skip to Content

07. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

அனுசுயாதேவி, சென்னை

என் பெயர் அனுசுயாதேவி. நான் சென்னையில் வசிக்கின்றேன். நான் கடந்த 23/10/2008-இல்தான் முதன் முதலில் அம்பத்தூர் தியான மையம் வந்தேன். அப்பொழுது என் பாஸ்போர்ட் ஏஜெண்ட்டிடம் மாட்டிக் கொண்டு இருந்தது. அவரிடம் இருந்து எப்படி வாங்குவது, எங்கு சென்று பார்ப்பது போன்ற பயங்கள் எனக்குள் இருந்தன. நான் இரண்டு நாட்கள் தொடர்ந்து வந்து தியான மையத்தில் இதற்காகவே பிரார்த்தனை செய்தேன். மூன்றாவது நாளிலிருந்து, அதாவது நான் பஸ்ஸில் என் ஊருக்குச் செல்லும்போதும், மற்றும் பல சமயங்களிலும், நினைவு வரும்பொழுதெல்லாம், அன்னையிடம் இந்த விஷயத்தைப்பற்றிச் சொல்லி, அன்னையை அழைத்துக்கொண்டே சென்றேன். அன்னை நிச்சயமாக எனக்கு ஜெயத்தைத் தருவார் என்றும் நம்பினேன்.

அன்று இரவே எனக்கு என் பாஸ்போர்ட் எங்குள்ளது என்பதை அந்த ஏஜெண்ட்டே என்னிடம் கூறினார். உடனே மறுநாள் காலையில் என் பாஸ்போர்ட்டையும் என்னிடம் கொடுத்து விட்டார். எனக்கு என் பாஸ்போர்ட் கிடைத்தது மிகவும் அதிசயம்தான். அன்னைதான் இந்த அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார் என்பதில் எனக்கு சிறிதும் ஐயமில்லை.

அன்னைக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

************

ஜீவிய மணி
 
வாழ்வு மையம் பிரச்சனைக்குரியது. ஜீவியம் மையமானால் பிரச்சனை வாய்ப்பாகும்.
 



book | by Dr. Radut