Skip to Content

05. நெஞ்சுக்குரிய நினைவுகள் - கல்வி

நெஞ்சுக்குரிய நினைவுகள்

கல்வி

கர்மயோகி

கல்வி, உலகம் இதுவரை பெற்ற ஞானத்தை இளைஞர்கட்கு சுருக்கித் தருவது. அது மனித முன்னேற்றம். நாம் பெற்ற அறிவை, பண்பை, பழக்கத்தை, நல்ல குணத்தை நம் குழந்தைகட்குக் கொடுக்க விரும்பினால் நாம் என்ன செய்கிறோம் ‘படி’ என்று கூறுகிறோம். விஷமம் செய்யாதே என்று சொன்னால் ஓரளவு பலன் உண்டு. திறமையும், நாணயமும் உள்ள தகப்பனார் மகனுக்குத் திறமை, நாணயத்தைத் தர முடியாது. பெரும்பாலும் குழந்தைகள் பெற்றோர் போல இருக்கும். சில சமயம் எதிராகவுமிருக்கும். நாம் பெற்றதை நம் குழந்தைக்குத் தருவது நிச்சயமாகச் சொல்ல முடியாது. எப்படி சமூகம் ஆயிரம் ஆண்டில் பெற்ற திறமை, குணம், பழக்கம், பண்பை இந்தத் தலைமுறைக்குத் தருவது என்று சிந்தனை செய்தால் அது முடியாத காரியம் எனப் புரியும். அதை நடத்தியது கல்வி எனில் கல்வியை அறிவது எளிதல்ல. குழந்தை, பெற்றோர் தொழிலில் உடன் இருந்து பயின்றால் தொழில் திறமை வரும். குணமோ, நாணயமோ, நல்லெண்ணமோ வருவதுண்டு. நிச்சயமாகச் சொல்ல முடியாது. Psychology மனோதத்துவ சாஸ்திரப் படியும், ஜாதகப்படியும் எதிரான குணம் நிச்சயமாக எழும் சந்தர்ப்பம் உண்டு. அது எழாமலிருப்பது அதிர்ஷ்டம். எழுந்தால் அதை மாற்றும் சக்தி உலகிலில்லை.

சமர்ப்பணம் அதைச் செய்யும்.

முதல் நிபந்தனை நம் குணங்கள் ஜீவியத்திலிருக்கலாம். பொருளி லிருக்கலாம். பொருளிலிருந்தால் நிச்சயம் குழந்தைக்கு வரும். ஜீவியத்திலிருந்தால் நிச்சயம் எதிரான குணம் எழும். நாம் நம் குணங்களை ஆழ்ந்து பெற்றால், அதன் பிறகு சமர்ப்பணம் செய்தால் குழந்தைக்கு நம் நல்ல குணங்கள் பெரிய அளவில் வரும். புலி எட்டடி பாய்ந்தால், குட்டி எண்பது அடி பாயும்.

இது தனிப்பட்ட மனிதனுக்குரியது. கல்வி உலகுக்குரியது. ஒரு சமுதாயம் செல்வம், நேர்மை, திறமை பெறுவது அரிது. சமூக அளவில் பின்வரும் முறைகட்கு எப்படி அதைச் சுருக்கித் தருவது?

நம் முன்னோர் கையாண்ட முறை பின்வருமாறு:

திறமைகளை வாழ்க்கைப் பலனுக்காகப் பெற்றால் அது அடுத்த தலைமுறைக்குப் பயன்படாது. படலாம். சிறிதளவு பலிக்கும். பெற்ற திறமைகள் ஆன்மீகப் பண்பால், வாழ்வில் அனுபவத்தால் அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் பரவும். அதிகமுமாகும். குருகுல வாசம் அந்த அடிப்படையில் ஏற்பட்டதே. இன்றைய சூழ்நிலையில் குருகுல வாசம் ஒத்துவாராது. கல்லூரிப் படிப்பு மட்டுமே முக்கியம். இன்றும் அதை நிறைவேற்ற வழியுண்டு. அதற்குமுன் இதுவரை நடந்தது என்ன என்று காண்போம். ஒரு மனிதன் முன்னுக்கு வரலாம். ஊரே முன்னுக்கு வருவது எளிதல்ல. ஊர் முழுவதும் ஊர் முன்னுக்கு வர முயல்வது பரநலம் (Selflessness, unselfishness, Self-giving, அர்ப்பணம், பரோபகாரம், பரந்த மனப்பான்மை). ஒரு தலைமுறை பெற்றதை அடுத்த தலைமுறை பெற பெற்றதை, பெற்ற ஞானத்தை எடுத்துக் கூறும் திறமை, சொல், விளக்கம் தேவை. சொல்வதைக் கேட்பவர் பெற ஆர்வமுள்ளவராகவும், பெறும் திறமையுள்ளவராகவும் இருக்க வேண்டும். எல்லாச் சமுதாயங்களிலும் (மேல் நாடு, நம் நாடு) இந்த அமைப்பு இயல்பாகச் சிறிதளவு உண்டு. நம் பழைய பண்பில் அது சற்று அதிகம். ஆன்மீக ஞானத்தை அடுத்தவருக்குக் கொடுக்க மந்திரம் ஏற்பட்டது. யோக முறைகள் - ஆசனம், பிராணாயாமம், ஜெபம் போன்றவை. தொழில், குடும்ப அறிவு அப்படிப் பரவ சில முறைகளை நம்மவர் கையாண்டனர். நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள், பிள்ளைகளை அடுத்தவர் கடையில் விட்டு அரை ஆள், முக்கால் ஆள், முழு ஆள் என பயிற்றுவித்தனர். 1947-இல் தமிழ்நாட்டு செல்வத்தில் அவர்களிடம் 1/3 பாகமிருந்தது. தமிழ் நாட்டு ஒன்றரை கோடி மக்களில், செட்டியார் ஒன்றரை இலட்சம் பேர். அது பயிற்சி முறைக்குரிய பவர். நாம் வெற்றிகரமாகப் பின்பற்றிய முறைகள் ஏராளம். எடுத்துக் கூறுவது எளிதல்ல.

எளிதல்ல என்றாலும், முறையுண்டு, பெரும் பலன் தரும்.
இன்று அம்முறைகளையும் வலுப்படுத்தலாம்.

அதுபோன்ற பல வழிகளில் இந்தியா வளம் பெற்றதால் மற்ற நாடுகள் படையெடுத்து வந்தன. அக்கல்வி முறையின் சாரம் பின்வருமாறு:

 • ஒரு திறமையைப் பெற்றவர் ஊருக்கு அதைத் தர வேண்டும்.
 • ஊர் தன் பொருளில் திறமை ஊறும்வரை பயில வேண்டும்.
 • தாம் பெற்றதை அடுத்த தலைமுறை பெற உரிய - சாதனங்களை — சூத்திரம், பயிற்சிமுறை, பணிவு, நினைவுக்குரியவை, செயலுக்குரியவை — தயார் செய்ய வேண்டும்.

இராகு காலம், என்று, எந்த நேரம் வரும் என்பதை எளிமையாக நினைவு கொள்ள ஒரு பாட்டுண்டு. அதுபோன்று ஏற்பட்டவைகளைச் சிறுவர்கள் பயில ஆர்வமுடையதாக அமைக்க வேண்டும்.

எல்லாச் சமுதாயங்களும் உலகில் எல்லாக் காலத்திலும் இம்முறைகளைத் தங்களால் இயன்றவரை செய்து முடித்தன. அதுவே நாம் இன்று பெற்றுள்ள கல்விமுறை.

கல்வி அறிவுக்குச் செய்வதைப் போல் திறமைக்கு, நாணயத்திற்கு, தெய்வ வழிபாட்டிற்கு, ஊருடன் ஒத்துழைக்க, வாழ, வளம் பெற சமூகம் ஏற்படுத்திய முறைகள், பின்பற்றிய தத்துவங்கள் ஏராளம். நாம் இவற்றின் பலனைப் பெற்றோம்.

 • இதுவரை பெற்றது பெரியது. குதிரை சவாரி போன்றது.
 • இனிப் பெறப் போவது மிகப் பெரியது. விமானப் பயணம் போன்றது.

சமூகம் நூறு கோணத்தில் முன்னேறுகிறது. நாம் அவற்றையெல்லாம் ஓரளவு தெரிந்து கொள்வது நல்லது. குறைந்தபட்ச அறிவுக்கு அது அவசியம். அந்த அடிப்படை யோகத்திற்கு ஞானமான அடிப்படை.

ஞானம் அறிவுக்கும், உணர்வுக்கும், செயலுக்கும் வேறுபட்டிருக்கும். பகுதியான ஞானம் பரவலாக உண்டு. எல்லா இடத்திலும் எந்த நேரத்திலும் முழுமையான ஞானத்தைப் பூரணமாகப் பெறுவது பூரண யோக வாழ்வு.

 • பிரம்மத்தை அறிந்தால் எதையும் அறியலாம் என்பது உபநிஷதம்.

(உதாரணம்)


நாம் எதைச் செய்தாலும் - வியாபாரம் செய்தால் - அதை மட்டும் செய்கிறோம், கற்றுக் கொள்கிறோம். எந்தச் செயலிலும் சாரத்தைக் காண முயன்றால் மூலத்தை அடைவோம். அது ஆதியாகும். நாம் ஆதிமூலம் என்பது அதுவே.

ஒரு தொழிலை, துப்பரக் கற்றவன் எந்தத் தொழிலையும் எளிமையாகக் கற்று பிரபலம் அடைவான், என்பது இந்திய பண்பில் கலந்து ஊறிய கல்வி அறிவின் தெளிவு. ஹோட்டல் நடத்தியவர் பஸ் ஓட்டுவதைக் காணலாம். ஒரு பஸ் பல பஸ்ஸாகிறது. ஹோட்டல் நடத்தியவருக்கு அதுவே தெரியும். பஸ் நிர்வாகம் செய்யத் தெரியவில்லை என்பதும் உண்டு. முதல்முறை கல்விக்கு உரிய முறை. இரண்டாம் முறை அவ்வளவு உகந்ததல்ல.

உலகில் மிகப்பெரிய வெற்றி, பிரபலம் பெற்றவர் இரு துறைகளை இணைத்தவர். நம் கலாச்சாரம் அனைத்துத் துறைகளையும் அடிப்படையில் ஐக்கியமாக இணைத்தது. அம்முறையை பகவான் அடுத்த உயர்ந்த கட்டத்திற்கு உயர்த்துகிறார்.

நாம் செய்யும் காரியங்களை ஊன்றிப் பார்த்து அறிய முயல்வது ஆத்ம வளர்ச்சிக்கு உதவும். நான் முன் எழுதிய கட்டுரையில் பத்து கருத்துகளை வெளியிட்டது இந்த அடிப்படையில். ஒவ்வொரு கருத்துக்கும் ஒரு கட்டுரை எழுதலாம். அனைத்தையும் சில கட்டுரைகளாக, ஒரே கட்டுரையாக எழுதலாம்.

 • நாம் ஊரை ஏற்கிறோம்.
 • உணர்ந்து ஏற்பது நல்லது.
 • உணர்ந்து, பாகுபாடு செய்து, நல்லதை மட்டும் ஏற்பது சரி
 • அது அடிப்படைக் கல்விக்கு ஆதாரமான முறை.
 • எதைப் பயின்றாலும் சாரம் உள்ளே போய் தங்கும் உள்ளே போய் ஜீவியத்தைக் கடந்து பொருளில் தங்குவது, தங்கி நிறைவது, அடுத்த தலைமுறைக்கு உதவும்.

********

ஜீவிய மணி
 
மனிதன் தன்னை அறியாதவன், தன் வாழ்வு ஆழத்திற்குரியது எனத் தெரியாதவன். தன்னையேயறியாதவன், தன் ஆழத்தை அறிய முடியாது. அவன் உந்தல்கள் அனைத்தும் உற்பத்தியாவது அவ்வாழ் மனத்தில். அவற்றை அவனால் மீற முடியாது. ஒரு திசையில் செல்லும் மனிதனை ஆழத்து உந்தல் அடுத்த திசைக்கு இழுக்கும்பெõழுது தன்னை மீறி அதை மனிதன் ஏற்பது அவன் அன்றாட வாழ்வு நிலை.book | by Dr. Radut