Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/8. சமர்ப்பணத்தில் எண்ணமும், செயலும் ஐம்பது ஆண்டுகள் பிரிந்திருப்பதுண்டு

  • மனம் என்பதை ஆராய ஆரம்பித்தால் புதிய புதிய விஷயங்கள் வெளிவரும்.
  • பகவான் ஸ்ரீ அரவிந்தர் எழுதியவற்றை மட்டும் எழுதினால் அது ஒரு முழு நூலாகும்.
  • முதலில் நமக்கு ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் உள்ள செய்தி மனம் என்பது அஞ்ஞானக் கருவி, ஞானத்தைத் தேடுகிறது.
  • கற்பனை மனத்தின் உயர்ந்த நிலை என நாம் அறிவோம்.
    எதிர்கால வாய்ப்புகளை உருவாக்குவது கற்பனை என்கிறார்.
    அத்துடன் கற்பனை அறியாமையின் கருவி என்ற விளக்கமும் தருகிறார்.
  • மனம் தன் அபிப்பிராயத்தை உலகத்து அபிப்பிராயமாக நினைக்கும். மாறான கருத்து இருக்க முடியும் என நம் மனம் நினைக்காது. மனத்திற்கு அத்திறனில்லை.
  • தனக்கு ஒரு விஷயம் தெரியும் என்பதால், பிறர் எவருக்கும் அது தெரியாது என நினைக்கும் குணம் மனத்திற்குண்டு.
  • ஒரு காரியத்தை மறுப்பதால், எதிர்ப்பதால், விலக்குவதால், அது வளரும் என்று மனம் அறியாது.
    தனக்கு எதிரானதை மனம் வளர்க்கும் முறை அது என நாம் அறிவதில்லை.
  • யானைக்குத் தன் பலமில்லை என எறும்பு அறிவதாக ஒரு கதையுண்டு.
    அது எறும்பின் நினைவில்லை.
    அது மனத்தின் தன்மை.
    மனித மனத்தின் தன்மையை விளக்கும் உதாரணம் அது.
  • நேர்மையாக மோட்சம் போகலாம் எனில், நேர்மை தவறினால் மோட்சமில்லை என நாம் நினைப்பது சரியெனப்படுகிறது.
  • துரியோதனனும், அவன் சகோதரர்களும் யுதிஷ்டிரருக்கு முன் சொர்க்கத்திலிருந்தனர் என்பது பாரதம்.
  • உள்ளூர்த் தலைவன் புதிய புத்தகம் படித்தவுடன் உலகத் தலைவருக்குத் தன் அறிவில்லை என்று பறைசாற்றுவான்.
  • சிந்தனை அறிவுடையது என நாம் அறிவோம்.
    சிந்திக்காவிட்டால், அறியாமை எனக் கொள்வோம்.
    அது சரி, அதுவே சரி எனத் தோன்றும்.
    பரிசீலனை செய்து அது பெரிய சரியான முடிவு என மனம் திட்டவட்டமாக அறியும்.
    சிந்தனை செய்யாவிட்டால், பெரிய ஞானம் வரும் என்று மனம் அறியாது.
    சிந்தனை என்ற திறமையில்லாவிட்டால், சிந்தனையால் எட்டித் தொட முடியாத எண்ணம் உதயமாகும், ஞானம் ஞானோதயமாக எழும் என
    மனிதனுக்குத் தோன்ற வழியில்லை.
  • சமர்ப்பணத்தில் அறிவு, ஞானம், சிந்தனை, திருஷ்டி, நேரடி ஞானம், அபிப்பிராயம், கற்பனை, தத்துவ ஞானம் என்ற பல்வேறு சிந்தனையின் அம்சங்கள் எழும்.
    நாம் அவற்றையெல்லாம் சமர்ப்பணம் செய்யும்முன் அவற்றைப்பற்றி அறிய வேண்டும். அதுபோன்ற ஒரு நிலை மேற்சொன்ன கருத்து.
    பிரபஞ்சத்தைத் தன்னுட்கொண்டது சமர்ப்பணம்.

******

ஜீவிய மணி
 
கசப்பாகப் பேசாமல் காரியம் நடக்காது. கசப்பை  இனிமையாகக் கூறுவது அவசியம்.
 



book | by Dr. Radut