Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 161: Our will tunes not with the eternal Will

இறைவன் செயலுடன் இணையாத நம் செயல்

  • குருட்டு இதயத்தின் பிரவாகமான உணர்ச்சி வேகம்
  • இயற்கையின் புதிரான யுக்தியை அறிய முடியாத
  • நாடித் துடிப்பையோ, உள்ளுறை இரகஸ்யத்தையோ அறிய முடியாத
  • வாழ்வெனும் கடலாழத்தைப் படகெனும் அறிவு தொட்டுணர முடியாது
  • அலைகளை எண்ணலாம் நுரையைக் கண்டு வியக்கலாம்
  • எந்த இடத்தை இந்த அசைவு தொடுகிறதென அறியாத
  • ஓடும் பிரவாகம் நாடும் முடிவைக் காண முடியாத
  • அதன் சக்தியை வழி வகுக்க முயல்கிறது
  • அதன் இயல்பான ஓட்டத்தை இனிமையான மனித இலட்சியமாக்கி
  • அதன் அனைத்தும் ஜடம் இருளான அறையினின்று எழுகிறது
  • பிரம்மாண்டமான லோக சக்தி கண்ணில் படாமல் மங்கி நிற்கிறது
  • ஓட்டமும் அதன் துகள்களும் நம் பங்கு
  • நம் மனம் உரிமையுள்ள ஜோதியினின்று தூர வதிகிறது
  • சத்தியத்தின் சிறு துண்டு அணுக்களைப் பிடித்துக் கொள்கிறது
  • நாம் அனந்த பிரம்மத்தின் அதி சிறு மூலை
  • சமுத்திர சக்தி நம் வாழ்வெனும் வாயில்களால் நுழைகிறது
  • நம் விழிப்பான அசைவு முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளது
  • நிழலெனும் நிற்குமிடங்களுடன் உரையாடலில்லை
  • நம் நட்புரிமைக்கு அறிவின் அஸ்திவாரமில்லை
  • நம் மனம் பார்க்க மறுக்கும் இரகஸ்யங்களினின்று எழும் நம் செயல்கள்
  • நம் ஆழ்ந்த ஆழம் அதை அறியாது
  • நம் உடலே புதிரான விற்பனைக் கூடம்
  • பூமியின் கால்கள் பூமிக்கடியில் மறைந்து புதைந்துள்ளன
  • நம் மனமும், வாழ்வும் அங்ஙனமே அமைந்துள்ளன
  • நமது ஊற்றுகள் உள்ளே மூடி மறைந்துள்ளன
  • சுவரின் பின்னால் மறைந்துள்ள சக்திகளால் நம் ஆத்மா அசையும்
  • அவை ஆத்மா உறையும் பூமிக்கடியிலுள்ள புகலிடம்
  • சக்திவாய்ந்த செயல் தன்னையறிய முற்படாது
  • சிந்திக்க முடியாதவனைத் தலைவனாக எழுத அழைத்தது
  • அது நாம் நினைக்கும், உணரும், இலக்கான இலட்சியம்
  • அவன் ஆழ்மனத்திலுறையும் ஆதிமனிதன்
  • பயிற்சியற்ற திக்கும் மொழிபெயர்ப்பாளன்
  • தன் சிறு வேலையை மட்டும் தானறிபவன்
  • செல்லில் எழுதும் ஏராளமான ரிக்கார்ட் வேலை
  • அடிமன இரகஸ்யத்துள் புதைந்த பெருநெறிகள்

******

ஜீவிய மணி
 
சொர்க்கம் internet என்ற பெயரில்  உலகிற்கு வந்துள்ளது.
 



book | by Dr. Radut