Skip to Content

08. அஜெண்டா

அஜெண்டா

True Victory is not for this side or that

(Volume 12, Page 143)

உண்மையான வெற்றி ஒரு புறத்திற்கில்லை

  • 1952இல் முதல் இந்திய தேர்தல் நடந்தபொழுது உலகமே இந்தியாவைப் பாராட்டியது. உலகிலேயே பெரிய மக்களாட்சியில் நடந்த தேர்தல் அது. அது ஜனநாயகத்தின் வெற்றி.
  • தேர்தலில் காங்கிரஸ் தமிழ்நாட்டில் தோற்றது. இந்தியாவில் அமோக வெற்றி பெற்றது. வெற்றியும், தோல்வியும் உள்நாட்டு கட்சிகட்கு. உண்மையில் தேர்தல் இந்தியாவின் வெற்றி.

    அண்ணன், தம்பி போட்டியில் ஒருவர் வெற்றி பெற்றால் அடுத்தவர் தோல்வி பெறுகிறார். வெற்றி யாருடையதாயினும், அது குடும்பத்திற்கு வெற்றி.

  • ஒரு வேலையில் நாம் நமது வெற்றிக்காகப் பிரார்த்திக்கிறோம்.
  • வேலையின் வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்வது முறை.
    அது நமக்கு அமோக வெற்றி தரும்.
  • சமரசம் இருவரும் பெறும் வெற்றி.
  • அன்னைக்குப் பிரார்த்திப்பதால் ஒருவர் பெறும் வெற்றி மூலம் எதிரியும் ஒரு வெற்றி பெறுவார்.
  • தற்காலம் win-win வெற்றி-தோல்வி போய் வெற்றி-வெற்றி என்று பேசுகிறார்கள்.
  • விற்பவருக்கும், வாங்குபவருக்கும் லாபம் தரும் திட்டங்கள் வந்துள்ளன.
  • சர்வதேச அரசியலில் இரு கட்சிக்கும் வெற்றி பெற பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன.
  • எதிரியை ஒழித்துக் கட்டுவது போய், இந்த முடிவால் எதிரி நஷ்டமடையக் கூடாது என்ற எண்ணம் பரவலாக எழுகிறது.
  • அன்னை சக்தி செயல்படுவதை உலகம் ஏற்றதற்கு இது அடையாளம்.
  • இன்டர்நெட்டில் புது கம்பனி ஆரம்பித்து எல்லா சேவைகளையும் இனாமாகக் கொடுத்தனர்.

    கம்பனி பெரியதாயிற்று. மதிப்பு 8 பில்லியன் டாலர் 35,000 கோடி ரூபாயாயிற்று. விற்றனர்.

    இனாமாக மக்களுக்குச் சேவை செய்ததால் ஆயிரம் கோடி இலாபம் எழுவது இந்தச் சட்டம்.

  • குழந்தைகளை பள்ளியில் அடிப்பார்கள். பள்ளிக்கூடம் போக குழந்தை மறுக்கும்.
  • 14 மாத குழந்தையைச் சேர்த்து பாடம் சொல்லிக் கொடுக்கும் பள்ளியில் 2000 பேர் காத்திருக்கிறார்கள்.
  • அடிக்காமல் சொல்லிக் கொடுப்பது இரு தரப்பாருக்கும் உரிய வெற்றி.
  • ரிஸர்வ் பேங்கில் 10 வருஷ சர்வீஸ் உள்ளபொழுது அவ்வளவு சம்பளத்தையும் கையில் கொடுத்து ஓய்வு கொடுப்பது பாங்கிற்கு இலாபம் எனக் கண்டனர்.
  • கொடுத்தால் வளரும்.
    செலவு செய்தால் வருமானம் பெருகும்.
    எதிரியின் திறமையைப் பாராட்டினால் நம் திறமை வளரும்.
    அன்பு செலுத்துவதால் அபரிமிதமாகிறது என்பன அன்னை கருத்துகள்.
    மண்ணின் ஆன்மீகம் விழிப்படைந்தால், பயிராவதால் மண் வளம் அதிகப்படும் என்ற சட்டமுண்டு. இதற்குரிய நிகழ்ச்சியை இதுவரை நான் கண்டதில்லை.

*******



book | by Dr. Radut