Skip to Content

07. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

P.37 எதுவும் மாறுவதில்லை, மனமும், புலனும் மாறுகின்றன

  • பச்சைக் கண்ணாடியை ஒருவன் போட்டுக் கொண்டால் உலகம் பச்சையாகத் தெரிகிறது.
    அதனால் உலகம் பச்சையாகி விட்டதென்று அர்த்தமன்று.
  • கண்ணாடியைக் கழட்டிவிட்டால் பச்சை மறைகிறது.
  • பச்சை நிறம் உலகத்தை விட்டுப் போய் விட்டதென நாம் புரிந்து கொள்வதில்லை.
    நம் கண் பச்சை நிறத்தை - கண்ணாடி மூலம் வந்த பச்சையை - இழந்து விட்டதென அறிகிறோம்.
  • கண்ணுக்குக் கண்ணாடி போல், ஆத்மாவுக்கு மனம் கண்ணாடியாக இருக்கிறது.
    மனம் சிருஷ்டியில்லாத நிறத்தை இழந்து விட சம்மதித்தால், உலகத்தை ஆத்மா தெளிவான மனம் வழி காணும். அது அற்புதமாக இருக்கும்.
  • உலகம் சிருஷ்டியில் என்றுமே அற்புதம், அதிசயம், ஆச்சரியம்.
  • மனிதனுக்கு மூட நம்பிக்கைகள் பல உண்டு. சில,
    • நடிகர்கள் திலகங்கள், போற்றப்பட வேண்டியவர்கள்.
    • அரசியல் தலைவர்கள் மனிதர் குல மாணிக்கங்கள்.
    • படிப்பும், பட்டமும் மனிதனுக்கு நல்ல குணம் தரும்.
    • பணம் பெற்றவன் உயர்ந்தவன். அவன் செய்வதெல்லாம் சரி.
  • சிந்தனை தெளிவுபடும்பொழுது இவையெல்லாம் மூட நம்பிக்கையெனப் புரியும்.
  • மூட நம்பிக்கை சிந்தனையாற்றல் எழாதவன் பெற்ற குறை.
  • அற்புதமாக சிருஷ்டியை ஏற்படுத்தியபின் இறைவன் அஞ்ஞானத்தை ஏற்படுத்தினான். அது ஞானத்திலிருந்து மீண்டு வந்தால் இந்த அற்புதம், அதிசயம், ஆச்சரியம் பேர் அற்புதமாகவும் பெரும் அதிசயமாகவும் காணும்.
  • அம்மாற்றத்தைச் செய்வது மனம், மாயை.
  • கண்ணாடியைக் கழட்டுவது போல் மனம் மாயையை இழந்தால் மனிதன் உலகை இறைவன் அனுபவிப்பது போல் பேரானந்தமாக அனுபவிக்கலாம்.
  • ஓரளவு மனிதனுக்கு அந்த அனுபவம் இப்பொழுதுண்டு.
    • சாப்பாட்டில் "ரஸம்” சமையலால் வெளிவருகிறது.
    • சத்தம் சங்கீதமாகி உள்ளத்தை உருக்குகிறது.
    • சிறு குழந்தையுள்ளம் தூய்மையான ஆத்மாவைக் காட்டுகிறது.
    • கற்புக்கரசி மோட்சம் போகிறாள்.
    • கடமையைச் செய்யும் கசாப்புக் கடைக்காரனுக்கும் மோட்சம் உண்டு.
    • அனுசுயா திருமூர்த்திகளை கற்பின் சக்தியால் குழந்தையாக்கினாள்.
    • அனைவரும் கைவிட்ட திரௌபதி ஆண்டவனால் மானம் காப்பாற்றப்பட்டாள்.

*******



book | by Dr. Radut