Skip to Content

06. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  • பிரம்ம ஞானம்
    • பிரம்ம ஞானம்.
      அனைவரும் பிரம்மம் - உயர்வு தாழ்வு உலகத்திற்குரியது.
      நல்ல குணம், கெட்ட குணம் சமூகத்திற்குரியது.
      அவை பிரம்மம் பெறும் ஆத்மானுபவம்.
      பிரம்மத்தில் விழிப்பவர் சமூகத்தினின்றும், மன தத்துவத்தினின்றும் விடுபடுகிறார்.
      எந்தக் குணமும் இல்லாத பிரம்மம் எல்லாவற்றையும் சிருஷ்டிக்கிறது.
      அந்தச் சிருஷ்டித் திறன் எந்தக் குணமும் இல்லாததால் வந்தது.
      நமது குணங்களை இழந்தால் நாம் பிரம்மமாவோம்.
      ஒரு கெட்ட குணம் போனால் அதிர்ஷ்டம் வரும்.
      ஒரு நல்ல குணம் போனால் அருள் வரும்.
      குணம் போவது பேரருள்.
      பிரம்மம் என்பது என்ன என அறிவது பிரம்ம ஞானம்.
      எதுவுமில்லாதது - சூன்யம் - எல்லாவற்றையும் உடையது என்பது பிரம்ம ஞானம்.
      உண்டு என்பது தெம்பு x இல்லை என்பது பெரிய தெம்பு.
      இருப்பதால் பெருமையடைவதை விட இல்லாததால் பெருமையடைய அறிவு போதாது, ஞானம் வேண்டும்.
    ஞானம் என்பது சித்தியாவது செயல்.
  • புன்னகை
    புன்னகை பூரித்து சிரிப்பாக மலர்வது ஆத்ம வளர்ச்சி.
    • சாப்பாடு நிறைவானதை உதடுகள் காட்டும்.
      ஆத்மா நிறைவு பெறுவதைக் கண்கள் காட்டும்.
      கண்கள் ஆத்ம வாயில்கள்.
      கவர்ச்சியான சிரிப்பு கண் கவரும் மன நிறைவு.
    • அழகான முகத்தில் விகாரமான சிரிப்பு அரிதாக எழும்.
      அது பத்ர காளி குணம்.
    • ஒட்டகம் போல விகாரமான சிரிப்பு மனம் கறைபட்டுக் கலங்கியிருப்பதைக் காட்டும்.
      கவர்ச்சியான புன்னகை அருவருப்பையும் சில சமயங்களில் தரும்.
    • வரமான புன்னகை.
      சோகம் கரையும் புன்னகை.
      சிரித்து மலரும் மகிழ்ச்சி நிறைந்த புன்னகை.
    • அனைத்தும் உருகும் அற்புதப் புன்னகை.
      உடல் மலர்ந்த உவகை மிகும் சிரிப்பு.
    • சிரிப்பின் சிறப்புள்ள புது ஆடை.
    • யோகத்திற்கு நிகரான பூரண பொலிவுள்ள சிரிப்பு.
    • சிரிப்பால் கொடுமையாக இருக்க முடியாது.  
    • கொடுமையான உள்ளம் உள்ளவரும் அதை மீறிச் சிரிக்க முடியும்.
    • ஆனால் கொடுமையால் சிரிக்க முடியாது.
      திருப்தியான சிரிப்பு.
    • உலகிலில்லாத அதிசயமான புன்னகை அன்னையின் சிரிப்பு.
      அன்னையின் சிரிப்பை அகிலத்தில் வேறெங்கும் காண முடியாது.
  • சுபீட்சம்
    • இங்கிலாந்தில் குதிரைக்கு ரூ.75/- மாதம் செலவு (1920இல்).
      நம் நாட்டில் அன்று ஹாஸ்டல் சாப்பாடு 7½ ரூ. மாதம்.
      நாம் பசுவை வணங்குகிறோம்.
      பசு எலும்பும் தோலுமாக இருக்கிறது.
      மேல் நாடுகள் செழிப்பானவை.
      1930இல் நம் ஊரில் 5 அணா (30 நயா பைசா) பெரிய கூலி. தச்சன், கருமான், மேஸ்திரி கூலி. கொல்லையில் அதுவே 1 அணா (6 நயா பைசா).
      அப்பொழுது இங்கிலாந்தில் கடைசி நிலைக் கூலி நமது 1 அணாவுக்குச் சமமான கூலி 12 அணா. USAஇல் அதைப் போல் 10 மடங்கு 7½ ரூ. தினக் கூலி. 75/- ரூ. அன்று தாசில்தார் சம்பளம்.
      அவர்கள் குதிரைக்கு அவ்வளவு செலவு செய்கிறார்கள்.
      மகாபாரத சினிமாவில் வரும் குதிரைகள் எல்லாம் அவர்கள் படத்தில் வரும் குதிரையில் பாதி அளவு இருக்கிறது.
      நாம் பசுவை வணங்குவோம்.
      நம் மாடுகள் எலும்பும் தோலுமாக இருக்கும். ஏழை நாடு.
      அவர்கள் மாடுகள் யானை போலிருப்பதைப் படத்தில் காணலாம்.
      இது உண்மை.
      அவர்களைப் போல் அறிவிலும், ஆன்மாவிலும் 1000 மடங்கு உயர்ந்த நாம் அவர்கள் நிலையில் வாழ்வில் 1/40 பங்கு இருக்க வேண்டிய அவசியமில்லை.
      தனிப்பட்டவர் தகுதியை அறிந்து உயரலாம்.
  • காது - Drumஇல் துவாரம்
    ஓரிரவு முழு தியானமிருந்தால் (concentration) காதில் அன்னை உருவம் தெரிந்தால்
    1. மறுநாள் துவாரம் இல்லாதது போல் கேட்கும்.
    2. தன்னை மறந்தபொழுது காது நினைவு வராவிட்டால் துவாரம் முழுவதும் சுத்தமாக அடைபடும் - கிழிந்ததைத் தைத்தால் மீண்டும் கிழியாது.

    காது அன்னையால் பூரண குணமாக வேண்டுமானால் ஒரு வாரம் போதும்.
    எந்தப் பிரச்சனைக்கும் இதுவே சட்டம்.

    முக்கியமானது
    - ஆழத்திற்குப் போவது.
    - அங்கு முடிவு செய்வது.
    - மற்றவை இரண்டாம்பட்சம்.
    - 1 வாரம் அது மட்டும் மனதில் ஆழத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்க வேண்டும்.
    அப்படிக் காது பூரண குணமானால் அடுத்து சோதனை செய்யக் கூடாது.
    ஆனால் சோதனை செய்யாமல் இதே முறையைப் பயன்படுத்தலாம்.
    எது குணமாகாது?

    1. நமது குணத்தைப் பிரதிபலிப்பது.
    2. பிறரிடமிருந்து அவர் மீது நமக்குள்ள ஆசையால் வருவது.
    3. அவை தவிர குணமாகாது என்பதில்லை.

தொடரும்....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஒருவர் அன்னையை அழைக்கும்முன் அவர் சக்தி செயல்பட ஆரம்பித்துவிடும்.
 

 
******
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அக்னி வளர்ந்து குளிர்வது ஆர்வம்.
உடல் சில்லிடுவது பக்தி.
 
 
******

 



book | by Dr. Radut