Skip to Content

12. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

Page 514 Even the objective is understood as subjective experience

     புறம் எனக் காண்பதையும் அகத்தின் அனுபவமாக ஏற்கிறோம்

  • அகம், புறம் தத்துவம். யோகத்தில் முக்கிய பகுதி.
  • காலம் அகம், இடம் புறம்.
  • செயல் புறம், எண்ணம் அகம்.
    நாம் செயல் என புறத்தில் காண்பதும் எண்ணமாக மனம் ஏற்றதாகும்.
    நாம் விலக்குபவை நம் மனம் ஆழ்ந்து ஏற்பதாகும்.
    ஒரு மகனை விலக்கி, அடுத்தவனை ஆதரிக்கும் தகப்பனாரின் ஆழ் மனம் வலிமையாக விலக்குபவன் மீதிருக்கும். குண விசேஷத்தால் விலக்கினாலும் மனம் ஆழத்தில் விலக்குவது தவறு என நினைந்துருகும். கடைசியில் தகப்பனார் வேண்டிய பிள்ளைக்குச் செய்ய விரும்பியது அனைத்தும், செய்ததும் உருப்படாமல் போய், விலக்கிய பிள்ளை வாழ்வில் பலிப்பது அனுபவம்.
    சஞ்சய் காந்தியைப் பாராட்டி, ஆதரித்து, அவரைப் பிரதமராக்க இந்திரா முயன்றார்.
    ராஜீவ் புறக்கணிக்கப்பட்டார்.
    சஞ்சய் மறைந்தார், ராஜீவ் பிரதமரானார்.
    ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் முதல் மகனுக்குப் பட்டம் கட்டினார், பாராட்டினார். அவர் இரண்டாம் மகன் சிதம்பரம் செட்டியார் தமிழ்நாட்டில் பெரிய தொழிலை நிறுவினார், பிரபலமானார். 3 தலைமுறைகளாக சிறப்பாக இருக்கிறார். முதல் மகன் வம்சம் இருந்த இடம் தெரியவில்லை.
  • மகாத்மா காந்தி அஹிம்சையை ஏற்றார், பாராட்டினார், ஹிம்சையை ஒதுக்கினார். 1943இல் காங்கிரஸ் நிர்வாகக் கமிட்டியில் "இந்தியா சுதந்தரம் பெற்றவுடன் இராணுவத்தைக் கலைக்க வேண்டும்' என ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானம் ஏகமனதாக நிராகரிக்கப்பட்டது. சுதந்தரம் வருமுன் காந்திஜி விலக்கிய ஹிம்சை தலைவிரித்தாடியது. தன் தவற்றை காந்திஜீ ஏற்றார். தவற்றை ஏற்கும் தைரியம் தைரியங்களில் தலையானது.
  • சர்ச்சில் இந்தியாவுக்குப் பரம விரோதி. பெரும் வீரர். இந்திய சுதந்தரத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார். என் வாழ்நாள் உள்ளவரை அதை ஏற்க முடியாது எனப் பேசினார். உலகப் போர் வந்தது. பிரிட்டன் நிலைகுலைந்த நேரம். சர்ச்சில் பதவியிலில்லை. சர்ச்சில் மட்டுமே நாட்டைக் காப்பாற்ற முடியும் என மக்கள் கருதி, சர்ச்சிலை மந்திரி பதவியில் அமர்த்தினர். ஹிட்லர் லண்டனைத் தாக்கினார். சர்ச்சில் பிரதமரானார். போரை வென்றார். அவர் மனம் இந்திய விடுதலையை எதிர்க்கிறது. உலகப் போர் தோற்றுப் போனால் உலகில் ஜப்பானுடைய ஏகாதிபத்தியம் ஏற்பட்டு, 500 ஆண்டிருக்கும் என்றார் பகவான். உலகப் போரில் இங்கிலாந்திற்கு உதவ அமெரிக்கா இந்தியாவுக்குச் சுதந்தரம் தர சர்ச்சிலை வற்புறுத்தினார்.

    இந்திய விடுதலையை மனம் எதிர்க்கலாம்.
    உலகப் போரை அதே மனம் வெல்லும்.
    உலகப் போரை வெல்வது இந்தியாவுக்குச் சுதந்தரம் வழங்குவது எனச் சர்ச்சில் மேல் மனம் அறியவில்லை.

  • நான் பாட்டிலைத் தொடமாட்டேன் என அடிக்கடி கூறுபவர் ஒருபோதும் குடிக்காவிட்டாலும் அவர் மனம் முழுவதும் பாட்டில் மீதிருப்பதை மறைமுகமாகக் கூறுகிறார்.
  • பார்வைக்குப் புறம், ஆழ்ந்து கவனித்தால் அதுவே அகம்.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஒருமைக்கு முந்தைய நிலைகள் சுமுகம், முரண்பாடு.
 
 
*****
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பிறரை மன்னிக்க எழும் பெருந்தன்மை தன்னை மாற்ற உதவுவதில்லை.
 
 
*****
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மனதில் அடக்க முடியாதது சமத்துவத்தை நாடினால் அவற்றின் புற வடிவங்களான வக்ரமும் சுயநலமும் தன்னை நாடி வருவதில்லை எனக் காணலாம்.
 
அடங்கிய மனதை சுயநலம் மறக்கும்.
 
 
*****



book | by Dr. Radut