Skip to Content

09. யோக வாழ்க்கை விளக்கம் VI

யோக வாழ்க்கை விளக்கம் VI

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

II/19) மனிதனின் ஜீவிய நிலைக்கேற்ப திருடன் அன்னையின் ஸ்பர்சத்தைப் பரிசாக அளிக்கிறான்.

  • திருடன் மூலம் வரும் அன்னை மனத்திண்மை மூலம் வரும் ஞானம்.
  • வாழ்வின் ஸ்பர்சம், அன்னையின் ஸ்பர்சம்.
  • நம்மிடமில்லாதது, நமக்கு வாராது.
  • அது நமக்குத் தெரியாமல், ஆழ் மனத்தில் இருக்கும்.
  • நாம் திருடன் என்பது ஆண்டவன் - அன்னை.
  • திருடன் நம் வீட்டிற்கு வந்தால், நம்முள் திருடன் இருக்கிறான் எனப் பொருள்.
  • இரமணாஸ்ரமம் வந்த திருடர்கள், எதையும் காணாமல், மகரிஷியை அடித்தனர்.
  • சிஷ்யர்கள் ஓடி வந்து தடுத்தார்கள்.
  • மகரிஷி அவர்களைத் தடுக்க வேண்டாம் என்றார்.
  • "எனக்குப் பூசை நடக்கிறது" என்றார்.
  • வாழ்வில் ஆசையிருப்பது, ரிஷிக்குத் திருட்டுப் புத்தி.
  • அது இருப்பதால் திருடன் வருகிறான். அவன் அடிப்பதைத் தடுக்காதே என்றார்.
  • ஸ்ரீ அரவிந்தருக்கு ரொட்டி சப்ளை செய்யும் பையன் 5ரூபாய் திருடியதற்காக சிஷ்யர்கள் அவனை அடித்தார்கள்.
  • சத்தம் கேட்டு பகவான் வந்தார்.
  • அடிக்க வேண்டாம் என்றார்.
  • அந்த 5 ரூபாயை அவனிடமே கொடுக்கச் சொன்னார்.
  • அவன் மனமும், அடிப்பவர்கள் மனமும் ஒன்று எனப் பகவான் கூறுகிறார்.
  • நம்மிடம் வருபவன் நம்மைப் பிரதிபலிப்பவன்.
  • இது அடிப்படை உண்மை.
  • இதை ஏற்க மனத்தில் உண்மை (Sincerity) வேண்டும்.
  • உள்ளதை உண்மை என்கிறோம்.
  • உள்ளதே உரியதைக் கவரும், ஈர்க்கும்.
  • மனம் எதை ஆழ்ந்து நாடுகிறதோ, நாம் அதுவாக மாறுவோம் என்பது கீதை.
  • அதன்படி நாம் படும் துன்பங்கள் நாமே விரும்பிப் பெற்றதாக இருக்கிறது.
  • ஆழ்ந்து ஆண்டவனை அழைக்க விரும்புகிறவர்க்கு, அப்படி அழைத்தாலன்றி போகாத வியாதி வரும்.
  • அவர் கேட்டது ஆண்டவனை ஆர்வமாக அழைக்கும் வாய்ப்பு.
  • அதை ஆண்டவன் வியாதியாக அளிக்கிறான்.
  • பெரிய வேலை வேண்டுபவர்க்கு இரவு, பகலாய் படிப்பது அமையும்.
  • கேட்டது வேலை, வந்தது படிப்பு.
  • படிப்பால்தான் வேலை வரும் என்பதால் படிப்பை ஆண்டவன் தருகிறார்.
  • சத்தியஜீவியத்தை ஆர்வமாக ஜீவனில் ஆழத்திலிருந்து கேட்டால் அது வரும்.
  • கண்ணப்பன் கேட்டது சிவனை, கிடைத்த வாய்ப்பு கண்ணைக் கொடுப்பது.
  • கொடுக்கப் பெருமைப்பட்டார். சிவனையடைந்தார்.
  • நமக்குக் கிடைத்தது, நாம் கேட்டதின் மறுரூபம்.

*****

II/20) முறையான சமூகத்தில் வீரியமான மனிதனுடைய ஆசையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில், விபசாரி இறைவனின் திருவுள்ளத்தைப் பூர்த்தி செய்ய ஆண்மையின் வீரியத்திற்குச் சேவை செய்கிறாள்.

  • வீரியத்திற்கு சேவை செய்யும் விபசாரி பூர்த்தி செய்வது திருவுள்ளம்.
  • ஆண்மை உலகைக் காக்கும்.
  • உலகைக் காப்பது வீரம்.
  • வீரம் மனத்தில் உயர்வது உடலில் வீரியம் சேர்வது.
  • க்ஷத்திரியன் ஊருக்கும் உலகத்திற்கும் காவலான அரண்.
  • க்ஷத்திரிய வம்சமில்லாவிட்டால் நாடு அடிமையாகும்.
  • அதனால் க்ஷத்திரியன் அரசனாகிறான்.
  • ஊருக்குப் பாதுகாப்பு தரும் க்ஷத்திரியனுக்கு உயிர் தருவது உள்ளத்தின் உயர்ந்த சிறப்பு.
  • உள்ளத்தின் சிறப்பு உயர்ந்தால் பெருகி வரும் வீரம் உபரியான வீரியமாக உடலில் ஊறும்.
  • சாமான்யரால் அவனுக்குச் சேவை செய்ய முடியாது.
  • அவன் மனம் ஆழ்ந்து திருப்தியுறும் சேவை ஆண்டவனுக்குச் செய்யும் அற்புதச் சேவை.
  • எளிய உள்ளமோ, முறையான மனமோ அதைச் செய்ய முடியாது.
  • மனம் உயர்ந்து சேவைக்காக முறையை மீறும் உத்தமரால் மட்டுமே முடியும்.
  • நாட்டு விடுதலைக்காக குடும்பக் கடமைகளை மறந்து சிறை செல்லும் தியாகியின் வீரம் அது.
  • ஒருவர் வயிற்றைக் கிழிப்பது கொலை.
  • புண்ணான குடலால் உயிரை இழக்க இருக்கும் ஒருவர் வயிற்றைக் கிழித்து, அவரைக் காப்பாற்ற அனைவராலும் முடியாது.
    முடிந்தவர்க்கு மனம் ஒப்பாது.
  • அதைச் செய்பவர் டாக்டர்.
  • அவர் உயிரைக் காப்பவர், உயிரை எடுப்பவரிலர்.
  • உலகம் உய்ய ஆத்ம ஞானம் தேடுபவன் ஞானி.
  • அதைச் செய்ய அவன் வாழ்வை மறுத்து பிரம்மச்சாரியாகிறான்.
  • உலகம் அவனிருக்குமிடம் தேடி, அவனை நாடி, அவன் தேவையைப் பூர்த்தி செய்கிறது.
  • அவன் வாழ்வுக்குத் துரோகம் செய்தவனிலன்.
    வாழ்வை வளப்படுத்த துறவறத்தை மேற்கொண்டவன்.
  • மரம், செடி, கொடியை அழிப்பது இயற்கைக்குச் செய்யும் துரோகம்.
  • அதைச் செய்பவன் காட்டைத் திருத்தி, நிலமாக்கி, உணவு உற்பத்தி செய்யும் விவசாயி.
  • அனைவரும் பெறும் உணவு அவன் காட்டுக்குச் செய்யும் துரோகத்தால் எழுவது.
  • நல்லதைப் பிறருக்காகச் செய்வது பெரிய மனம்.
  • உலகம் கெட்டது எனப் புறக்கணித்ததை உலக நலனுக்காக ஏற்றுச் செய்வது பெரிய உள்ளம்.
  • 4 பிள்ளைகள் நிலத்தில் வேலை செய்து குடும்பத்திற்குச் சேவை செய்யும் பொழுது, அதைச் செய்ய மறுப்பது சுயநலம். அதன் பலனை எடுத்துத் தனக்குச் செலவு செய்வது சுயநலம் குற்றமாவது. கல்லூரிக்குச் செல்லுபவன் அதைச் செய்கிறான். அவன் படிப்பால் செய்யும் சேவையை மற்றவர்களால் உழைப்பால் செய்ய முடியாது.
  • பரத்தை உலகைக் காப்பாற்ற தியாகம் செய்யும் உத்தமத் தியாகிகளின் தணியாத வீரமான வீரியத்தை தன் நலம், தன் நல்ல பெயரை இழந்து ஏற்பவள். உலகம் அவளைப் பழித்தாலும், அவள் செய்வது திருவுள்ளம். உலகத்தின் வணக்கத்திற்குரியது அவள் ஆத்மா. அவள் கற்பு ஆண்டவனுக்குரியது; விலை மதிக்க முடியாதது. போர் வீரனையும், தேசபக்தி மிகுந்த தியாகியையும் கடந்த சேவை செய்பவள் பரத்தை.

*****

II/21) ஆன்மா முதிர்ந்து உடலால் வெளிப்பட்டால், திருமண வரையறையை மீறி, பவித்திரமாகப் பக்குவம் பெற்ற மற்ற ஆன்மாவுடன் உடலால் ஐக்கியப்படும் நிலை விபசாரியின் நிலையாகும்.

  • பக்திக்கு ஜாதியில்லை. உடல் பக்தியை வெளிப்படுத்தினால் உலகத்தார் அனைவருக்கும் அது உடையதாகும்.
  • ஆன்மா ஜீவனுள் நாம் அறியாமல் புதைந்துள்ளது.
  • தவத்தால் வெளிப்படும் ஆத்மா பக்தியாலும் வெளிப்படும்.
  • ஆண்டாள், மீராவுக்கு அப்படி பக்தி பக்குவம் அளித்தது.
  • பக்குவப்பட்ட ஆத்மா மனத்தில் வெளிப்படுவது மனத்தின் சைத்திய புருஷன்.
    இந்த நிலையில் அனைவர் எண்ணமும் தெரியும்.
    பிறர் எண்ணம் நல்லதாகவே தெரியும்.
    எவருக்கும் கெட்ட எண்ணமில்லை எனப் புரியும்.
    பிறருடைய கெட்ட எண்ணம் என மனம் காண்பதை மனத்தால் வெளிப்படும் ஆத்மா நல்ல எண்ணமாகக் காண்கிறது. நம் ஆத்மாவின் ஸ்பரிசம் படுவதால் அது கெட்ட எண்ணமாக இருந்தாலும், நல்ல எண்ணமாகத் திருவுருமாறும்.
    எதிரி நண்பனாவான்.
    மனம் அவனை அன்பான எண்ணத்தால் தழுவும்.
  • முதிர்ந்த ஆத்மா மனத்தில் வெளிப்பட்டது போல உணர்வில் வெளிப்படும்.
  • அதற்கு vital psychic உணர்வின் சைத்திய புருஷன் எனப் பகவான் பெயரிடுகிறார்.
  • அதற்கு எல்லோருடைய உணர்ச்சிகளும் தெரியும்.
  • அவை நல்லதாக மட்டும் தெரியும்.
  • நல்லதாக நம் ஆத்ம ஸ்பர்சத்தால் மாறவும் முடியும்.
  • உடலில் ஆத்மா வெளிப்பட்டால் (sensation) உடலுணர்ச்சி புல்லரிக்கும்.
  • அவ்வுடலுக்கு புல்லரிக்கும் நல்லுணர்வு மட்டும் தெரியும்.
  • அந்த ஆத்மாவால் பிறர் தாழ்ந்த உணர்ச்சியை உயர்ந்த உணர்ச்சியாக மாற்ற முடியும்.
  • கோபிகைகள் கிருஷ்ண பரமாத்மாவிடம் அது போன்ற தொடர்பு கொண்டவர்கள்.
  • "அது கற்பனை எனவும் கூறுகின்றனர். அது கற்பனையாகவே இருந்தால் அக்கற்பனையைச் செய்தவருக்கு நான் நன்றி கூறுகிறேன்'' எனப் பகவான் கூறியுள்ளார்.
  • பிருந்தாவன லீலைக்குப் பின் அது போன்ற நிகழ்ச்சிகளை ஆன்மீக இலக்கியம் கூறவில்லை.
  • ஆன்மா உடலில் வெளிப்படுவது எதிர்கால சித்தி.
  • மனத்திலும் இதுவரை முழுவதுமாக வெளிப்படவில்லை.
  • ஆண்டாளுக்கும், மீராவுக்கும் உணர்வில் ஆத்மா வெளிப்பட்டது.
  • உடலிலும் ஆன்மா வெளிப்பட்ட சித்தி இதுவரை கேள்விப்படாதது.
  • அவனுக்கு உடலெல்லாம் மூளை எனக் கூறுவதுண்டு.
  • உடம்பெல்லாம் கண்ணாய் ஆனாய் என நாயனார் பாடியுள்ளார்.
  • உடம்பெல்லாம் இதயம் ஏற்படுவது ஆண்டாளுக்கு அடுத்த உயர்ந்த நிலை.
  • உடலெல்லாம் ஆத்மா நிறைவது முடிவான சித்தி.
  • நம் ஆத்மா புதைந்த நிலையிலும் நாம் மனிதரை ஆத்மா எனக் கருதுகிறோம்.
  • திருடனுடைய அடி திருவடி என்பது ஆன்மா முழுவதும் மறைந்த நிலையிலும் அந்த ஆன்மாவால் உந்தப்பட்டு (unconsciously) திருடன் செயல்படுவதால், அவன் அறியாத ஆத்ம செயலை பக்தர் அறிந்து போற்றுவதால் அவனுடைய அடி பக்தனுக்குத் திருவடியாகிறது.
  • சகதியும், சேறும் குழந்தை அதில் விளையாடும்பொழுது பக்தனுக்கு அழுக்காகத் தோன்றாமல் பிரம்மமாகத் தோன்றுகிறது.
  • பிரம்மப் பார்வைக்கு விபசாரியின் செயல் விலை மதிக்க முடியாத கற்புடையது.

*****

II/22) சமூகக் கட்டுப்பாட்டையும், உள்ளத்தின் பொன்னான உணர்வுகளையும் மீற முடியாதவனுக்கு அன்னையின் ஆன்மீகச் சுதந்தரத்தை அனுபவிக்க முடியாது.

  • சமூகத்தையும் மனச்சாட்சியையும் கடந்தது ஆன்மீகச் சுதந்தரம்.
  • மனிதன் தனிப்பட்டவனில்லை, சமூகத்தின் அங்கம்.
  • கை, கால் உடலின் பகுதியாக இருப்பதைப் போல் மனிதன் சமூகத்தின் அங்கமாக இருக்கிறான்.
  • நாம் எழுந்து நடந்தால் கை உடன் வர மறுக்க முடியாது.
  • உடலுக்குக் காய்ச்சல் வந்தால், காலோ, கையோ, விலகியிருக்க முடியாது.
  • சமூகம் வளர்ந்து, முதிர்ச்சியடைந்தபின், மனிதன் அதனின்று பிரிந்து வேறுபடுகிறான்.
  • இது பாலைவனச் சோலை போன்றது, அரிது. முதிர்ந்த சமூகத்தில் முதிர்ந்த மனிதன் அது.
  • அவனுடைய தலைமையை சமூகம் ஏற்கும்.
  • அவனால் சமூகத்தை அதன் பாதையினின்றும் திருப்ப முடியும், எதிராகப் போகச் சொல்ல முடியும்.
  • அவன் தலைவன், தலைமைக்குத் தகுதியுள்ளவன், தனித்தன்மையுடையவன்.
  • அவனை individual எனக் கூறுகிறோம். தனித்தன்மை படைத்தவனே மனிதன்.
  • அன்னை சமூகத்தைக் கடந்தவர்.
  • மனச்சாட்சி சமூகத்தைக் கடந்தது.
  • அன்னை மனச்சாட்சியையும் கடந்தவர்.
  • மனச்சாட்சி பொன் விலங்கு என்பவர்.
  • ஊரில் பெரியவன் தவறு செய்தால், எவரும் எதிர்த்து சாட்சி கூறப் பயப்படுவார்கள்.
  • அவர்கள் அடி, உதைக்குப் பயந்து அடங்குபவர்கள்.
  • பெரிய மனிதன் செய்தது சரி, அவன் செய்த தவறும் சரி என்பவருண்டு.
  • அவர்கள் மனச்சாட்சியில்லாதவர். அவர்கள் ஊருடன் ஒத்துப் போகும் மனிதர்கள்.
  • மனச்சாட்சி பயப்படாது.
  • தனித்து நிற்கும் தைரியம் உடையது.
  • அவர்களை மனித குல மாணிக்கம் என்பார்கள்.
  • மனச்சாட்சி தர்ம சங்கடத்தில் கொண்டு விடும் நேரம் உண்டு.
  • உள்ளதைச் சொன்னால் ஊர் பற்றி எரியும் நேரம் உண்டு.
  • தர்மபுத்திரரை ஆண்டவன் பொய் சொல்லச் சொன்னான்.
  • அவர் மனச்சாட்சி உறுத்தியது.
  • ஆண்டவனுக்கு அடங்கி பொய் சொன்னார்.
  • அப்படியும் தேர்ச் சக்கரம் இறங்கியது.
  • திரௌபதி மானத்தைக் காக்க அவரால் முடியவில்லை.
  • ஐந்து கணவன்களும் "ஊருக்கு'' அடங்கினர்.
  • மனச்சாட்சியை மீறி அடங்கினர்.
  • பெண் மானத்தைக் காப்பாற்ற முடியவில்லை.
  • அந்த நேரம் மனச்சாட்சி பொன் விலங்காகும்.
  • பெண்ணின் மானம் பறிபோவதை தர்மமோ, மனச்சாட்சியோ காப்பாற்ற முடியவில்லை.
    ஆண்டவன் காப்பாற்றினான்.
  • ஊரைவிட மனச்சாட்சி உயர்ந்தது.
  • மனச்சாட்சியைவிட தர்மம் உயர்ந்தது.
  • தர்மம் தலை காக்கும் என்றனர்.
  • தருமபுத்திரர் தலையை அத்தர்மம் காக்கவில்லை.
  • அதைக் கடந்து தலையைக் காக்கும் தர்மம் உண்டு.
  • அந்தத் தர்மப்படி தருமர் பொய் சொன்னார்.
  • அந்தத் தர்மப்படி அர்ஜூனன் போரிட இசைந்தான்.
  • கொலை ஆண்டவனுக்குத் தவறில்லாத நேரம் உண்டு. அவன் கொலை செய்யச் சொல்வதை மனிதன் ஏற்காவிட்டால் 100 கொலை விழும் என்று பகவான் கூறுகிறார்.
  • ஊரையும், மனச்சாட்சியையும், தலையைக் காக்காத தர்மத்தையும் கடந்து ஆண்டவன் சொல்லை ஏற்பவன் அன்பன்.

*****

II/23) கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டு கம்பளிப் பூச்சி போல் கூட்டிலிருக்கும் நிலையில் சட்டத்தை மீறினால் அது முழு அழிவைத் தரும்.

  • சட்டம் கட்டுப்பாட்டுக்குரியது.
  • விலங்கு வாழ்வு நாகரிகமான மனித வாழ்வாக மாறியது கட்டுப்பாட்டால்.
  • ஊருக்குக் கட்டுப்பாடுண்டு. அதை சட்டம் என அறிவோம்.
  • உலகத்திற்கும் அது போன்ற சட்டம் உண்டு.
  • சமூகத்திற்குரிய கட்டுப்பாட்டுக்கு தர்மம் எனப் பெயர்.
  • மனம் ஏற்கும் கட்டுப்பாட்டிற்கு மனச்சாட்சி எனப் பெயர்.
  • எந்த காரியத்தைச் சாதிக்கவும் அதற்குரிய கட்டுப்பாடுண்டு.
  • நியாயம் பெற கோர்ட்டுக்குப் போகிறோம்.
  • கோர்ட்டில் நியாயம் பெற கோர்ட்டார் உத்தரவுக்குக் கட்டுப்பட வேண்டும்.
    அவர்கள் கேட்கும் தஸ்தாவேஜைக் கொடுக்க வேண்டும்.
    கோர்ட் கூப்பிடும்பொழுது போக வேண்டும்.
    நம் பக்கம் நியாயமிருந்தாலும் டாக்குமெண்ட், சாட்சியிருப்பவையே செல்லும்.
    கோர்ட்டிற்குப் போனபின் வக்கீலுக்குக் கட்டுப்பட வேண்டும்.
    வக்கீலை மீறி நடந்தால் கேஸ் ஜெயிக்காது.
    உண்மையிருந்தாலும், அத்தாட்சியில்லாமல் கோர்ட் நியாயம் வழங்காது.
    கோர்ட் தீர்ப்பு கொடுத்தபின் அதற்குப் பணிய வேண்டும்.
    கோர்ட்டார் தீர்ப்பை எதிர்க்கும் உரிமை நமக்கில்லை.
    ஏற்க மறுத்தால் அப்பீலுக்குப் போகலாம்.
    கோர்ட்டில் நாம் பதிவு செய்த எந்த பத்திரத்தையும் எதிரிக்குப் பார்க்கும் உரிமையுண்டு.
    அனைவருக்கும் பார்க்கும் உரிமையுண்டு.
    "என் பத்திரத்தை எவரும் பார்க்கக் கூடாது' எனக் கூற முடியாது.
    அது கட்டுப்பாட்டை மீறுவதாகும்.
  • பிறந்ததிலிருந்து சாகும்வரை, பிணமான பின்னும் கட்டுப்பாடு அதன் அதிகாரத்தைச் செலுத்தும்.
  • கட்டுப்பாட்டுக்குக் கட்டுப்படுவது அதற்குரிய சுதந்திரத்தை அனுபவிப்பது.
  • எந்த கட்டுப்பாட்டை மீறினாலும் எல்லாம் போய்விடும்.
  • கட்டுப்பாட்டுக்கு வெளியே வருவது கட்டுப்பாட்டை மீறியதாகாது.
  • கட்டுப்பாடு உயர்ந்த பலன் தரும்.
  • அதை விட்டு வெளியே வருபவர்க்கு உன்னதமான பலன் உண்டு.
  • காங்கிரஸ் கட்சியினர் 1947இல் பதவிக்கு வந்தனர்.
  • மகாத்மா கட்சியை விட்டு வெளியேறியவர்.
  • அவருக்குப் பதவியில்லை, தலைமையும், அதற்குரிய பிரபலமும் உண்டு.
  • கல்லூரியில் படித்தால் பட்டம் உண்டு.
  • தாகூர் படிப்பை விட்டு வெளியேறினார், நோபல் பரிசு பெற்றார்.
  • கட்டுப்பாடு கம்பளிப்புழுவை, பட்டாம்பூச்சியாக்கும்.
  • அதனால் கட்டுப்பாடு உயர்ந்தது.
  • கட்டுப்பாடு (finite) சிறியதற்குரியது, சிறியதைப் பெரியதாக்க வல்லது.
  • கட்டுப்பாட்டை மீறுவது ஆபத்து. ஓடும் ரயிலிலிருந்து இறங்குவது போல்.
  • கட்டுப்பாட்டை விட்டு நாமே வெளியே வருவது (infinite) பெரியதற்குரியது.
    பெரியது கட்டுப்பாட்டை விலக்கினால் உயர்ந்ததாகும்.
  • அது அரிபொருள்.
  • அன்னை அரியதை அனைவருக்கும் தருகிறார்.

தொடரும்....

*****

ஜீவிய மணி
 
கெட்டதில் விரும்பி சிக்குபவன் நல்லதை மறுப்பான்.
 

*****



book | by Dr. Radut