Skip to Content

06. அஜெண்டா

அஜெண்டா

Pavitra understood Sri Aurobindo after reading 'Adventure of Consciousness'

"அட்வென்ச்சர் ஆப் கான்ஷஸ்னஸ்" என்ற புத்தகத்தைப் படித்தபின் பவித்திராவுக்கு ஸ்ரீ அரவிந்தர் புரிந்தது

பவித்ரா பிரெஞ்சு இன்ஜினீயர். ஆஸ்ரமம் ஆரம்பிக்குமுன் வந்தவர். திபேத்தில் ஒரு புத்த மடத்திற்குப் போக அவர் ஜப்பானிலிருந்து வந்தார். வழியில் புதுவையில் பகவானைச் சந்தித்தவர் இங்கேயே தங்கிவிட்டார். அந்த நாளில் பகவான் பவித்ராவை தினமும் சந்தித்துப் பேசுவார். ஆசிரமப் பள்ளி ஆரம்பித்த காலத்தில் இவரை முதல் டைரக்டராக அன்னை நியமித்தார். உலகப் போர் நடக்கும் பொழுது பகவான் ரேடியோ செய்தி கேட்பது வழக்கம். அப்பொழுது பவித்ரா அறையில் ரேடியோ இருந்தது. அதிலிருந்து கனெக்ஷன் மூலம் பகவான் அறையில் ஒலிபெருக்கி அமைத்து பகவான் செய்தி கேட்க வசதி செய்தார்.

மேல்நாட்டு மக்கள் அளவு கடந்த கட்டுப்பாடுடையவர்கள். 11ஆம் வயதில் பவித்ரா தான் பெற்ற சைக்கிளை ஆர்வத்தால் "அக்கு வேறு, ஆணி வேறாக" பிரித்துவிட்டார். பிரித்தவருக்கு மீண்டும் பூட்டத் தெரியவில்லை. ஒரு ரிப்பேர் கடையில் கொடுத்து பூட்ட வேண்டும். தானே பாகங்களை அறிந்து, ஒவ்வொன்றாக மீண்டும் சைக்கிளாகச் சேர்க்க முடிவு செய்து பெரும்பாடுபட்டு வெற்றி கண்டார்.

பவித்ரா இறந்தவுடன் அன்னை நெஞ்சில் அவர் ஆத்மா வந்து உறைந்தது ஒரு நிமிஷம்கூட வெளியில் போகவில்லை. சூட்சும வாழ்விலும் அப்படி அன்னை நெஞ்சில் வந்து தங்கிய சாதகர்கள் வெளியே போய்ப் பலரையும் சந்தித்துவிட்டு மீண்டும் வருவதுண்டு என அன்னை கூறியுள்ளார்.

பவித்ரா இன்ஜினீயர். பல்வேறு ஆராய்ச்சிகள் செய்தவர். அவருடைய ஆராய்ச்சிகளை அவருக்குப் பின் சோதனை செய்தவர், அணு ஆராய்ச்சியும் பவித்ரா செய்ததாகவும், அணுகுண்டு செய்யும் விஷயங்களையும் அதில் கண்டதாகக் குறிப்பிட்டார்.

மேற்கூறிய புத்தகத்தைச் சத்பிரேம் எழுத அன்னை நெடுநாளாக முயன்றார். புத்தகம் வெளிவந்து மேல்நாடுகளில் பிரபலமாகி, அன்னையைத் தேடி ஏராளமான பேர் வர உதவியாக இருந்தது. ஆசிரம வாழ்வில் ஒரு பெரிய புரட்சியைச் செய்த நூல் அது. மிகவும் எளிய நூல். பிரெஞ்சில் எழுதப்பட்டது. ஆங்கில மொழிபெயர்ப்பு உயர்ந்த ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. இந்நூலை படித்தவர் போற்றிய முக்கிய கருத்து மனம் என நாம் கூறுவதில் சிந்திக்கும் மனம் (Mind) வேறு, உணரும் பிராணன் (vital) வேறு என்பதாகும். பொதுவாக புறச் செயல், அகவுணர்வையே அறியும் நமக்கு இந்த வேறுபாடு முக்கியமாகிறது.

  • ஸ்ரீ அரவிந்தம் எளிதில் புரியாது எனப் பெயர் வாங்கியது.
  • பவித்ராவே இக்கூற்று மூலம் அவ்வுண்மையைப் பேசுகிறார்.
  • எவ்வளவு நாள் சூரியனைப் பார்த்தாலும் பூமி உலகைச் சுற்றி வரும் உண்மை தெரியப்போவதில்லை என்பது போல் ஆன்மீகத்திற்கு முக்கியமான உண்மை.

    "நானே இறைவன். உலகமே இறைவன். இறைவனைத் தேடி அலைவது அஞ்ஞானம். நம்மை நாமே இறைவனாக அறிவதே ஞானம்" என்ற வேதாந்தக் கருத்து.

  • பகவான், அன்னையை எவ்வகையில் ஒருவர் அறிந்தாலும் - தரிசனம், போட்டோ, நூல் - ஆரம்பத்திலேயே இந்த ஞானம் வந்துவிடும். இதைக் காப்பாற்றுவது அரிது. நாம் இந்த ஞானத்தைப் பெற்றோம் என்பதும் ஒருவர் எடுத்துக் கூறாமல் தெரியாது. அதையே பவித்ராவின் கூற்று வெளிப்படுத்துகிறது.
  • அன்னையை அறிவதே ஆன்மீக பாக்கியம் என்பதன் உட்கருத்து அது.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அவசரம் பயன்படாது எனத் தனக்கே 20, 30 வருடங்களாகச் சொல்லிக் கொள்பவர், அறிவு ஏற்றுக் கொண்டதை உணர்வு ஏற்க இவ்வளவு நாளாயிற்று என்று அறிய வேண்டும்.
 
அறிவு உணர்வாக ஒரு ஜென்மம் தேவை.
 
 
*****
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
உள்ளத்தில் மறுக்க முடியாத வேகமிருந்தால் வக்ரமும் சுயநலமும் நம்மை நாடி வரும். ஏற்றுக்கொண்டு எதிர்காலத்தில் யோசனை செய்வது வழக்கம்.
 
 
******



book | by Dr. Radut