Skip to Content

04. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் நமோ பகவதே!

ஸ்ரீ அன்னை அரவிந்தர் துணை!

மதிப்புக்குரிய பேரன்புமிக்க ஸ்ரீ அப்பா அவர்களுக்கு அநேக நமஸ்காரங்கள்!

நாங்கள் குடும்பத்துடன் மடிப்பாக்கம் கைலாஷ் flatற்கு வந்து சுமார் பத்து, பன்னிரெண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இங்கு வந்த புதிதில் என் சிநேகிதி மாமி (மீனாக்ஷி மாமி) பெண் எங்கள் வீட்டிற்கு வந்து, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினாள். அவள் அம்மா சொன்னபடி வந்ததாகவும், உதவி கேட்டு வந்திருப்பதாகவும் சொன்னாள். அதாவது, தன் கணவருக்கு வேலை சரியாக இல்லாததினால் வருமானத்திற்கு கஷ்டப்படுவதாகவும், அதற்கு வழி தேட என்ன செய்யலாம்.... அப்பளம் செய்யலாமா, கரு வடாம் செய்து விற்பனை பண்ணலாமா.... யோசனை சொல்லுங்கள் என்று கேட்டாள். அவளைப் பார்த்து மனது கஷ்டப்பட்டது. அதே சமயம் அவளிடம் சற்று யோசித்துவிட்டு சொன்னேன், "எனக்கு தெரிந்ததெல்லாம், ஸத்தியமே வடிவமான ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தரை தான் தெரியும்'' என்று சொல்லி, ஒரு சிறு அன்னை ஸ்வாமி படம் ஒன்றை கொடுத்து, வழிபடும் முறையையும் சொன்னேன். அவள் சந்தோஷமாக வாங்கிக் கொண்டு, வழிபடவும் செய்தாள். சில மாதங்கள் கழித்து பார்த்த பொழுது, அவள் என்னிடம் சொன்னாள், "நீங்கள் கொடுத்த படத்தை வைத்து பூஜை செய்து வருகிறேன். ஸ்ரீ அன்னை வழிகாட்டிவிட்டார். கோயில்களுக்கு பிரஸாதங்கள் (வடை, சக்கரை பொங்கல்) பலர் கேட்டபடி செய்து தருகிறேன். இப்பொழுது சௌக்கியமாக இருக்கிறேன்'' என்றும், இன்னும் சில வருடங்கள் கழித்து சொன்னாள், "பெரிய வாடகை வீடு போயிருக்கிறேன். காட்டரிங் இருவருமாக நடத்தி வருகிறோம். பெயர் ஸ்ரீஅன்னை ஸ்ரீஅரவிந்தர் காட்டரிங்'' என்றும் சொன்னாள். இப்பொழுது பத்து நாட்களுக்கு முன்பு அவள் சொன்னதாக அவள் அம்மா சொன்னாள், "தனி வீடு மாடியுடன் வாங்கிவிட்டதாகவும், தை மாதம் குடி போகப்போவதாகவும், கிரஹப் பிரவேசத்திற்கு எல்லோரும் கண்டிப்பாக வரவேண்டும்'' என்றும், "ஸ்ரீஅன்னைதான் ப்ரத்யக்ஷ தெய்வம்'' என்றும் சொன்னதாகவும் சொன்னாள். மெய்சிலிர்த்து போய்விட்டேன்.

-- லலிதா சேதுராமன், சென்னை

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அடக்க முடியாது போனால் கணக்குப் போட முடிவதில்லை.
 
 
 
*****
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மாறும் நேரத்தில் அடுத்த நிலைக்குரிய விஷயம் இந்நிலையில் பலஹீனமாக இருக்கும். இந்நிலைக்குரிய விஷயமில்லாத நேரம், இந்நிலைக்குரிய தோற்றமே சாதிக்கும்.
 
அடுத்த நிலைக்கு மாறும் நேரம் தோற்றமே முக்கியம்.
 
*****



book | by Dr. Radut