Skip to Content

2. ஆழ்ந்த முடிவு தன்னைத் தானே பூர்த்தி செய்து கொள்ளும்

ஆழ்ந்த முடிவு தன்னைத் தானே பூர்த்தி செய்து கொள்ளும்

ஓடிப்போன லிடியாவை Pride and Prejudiceஇல் டார்சி £ 5000 செலவு செய்து மீட்கிறான். கார்டினர், பென்னட்டின் மைத்துனர் பணத்தைக் கொடுக்க முன்வருகிறார். யார் பணம் செலவு செய்தது என பென்னட்டிற்குத் தெரியாது. மைத்துனர் செய்ததாக நம்புகிறார். பென்னட் வருஷ வருமானம் சி 2000 பவுன். ஓடிய பெண்ணை மீட்டாயிற்று. பென்னட்டிற்கு இப்பணத்தை இப்பொழுது கொடுக்க முடியாது. அடுத்தவர் பாரத்தை ஏற்கவில்லையெனில் ஆபத்து. காரியம் முடிந்துவிட்டது. பொறுப்பு பென்னட்டுடையது. டார்சி விஷயம் பென்னட்டுக்கு வரவில்லை. மைத்துனர் எவ்வளவு பணம் செலவாயிற்று எனக் கூறவில்லை. அதைக் கேட்கவில்லை. என் தங்கை மகளுக்குச் செலவு செய்ய எனக்கு உரிமையுண்டு என சந்தோஷப்பட்டார்.

இந்நிலையில் பென்னட் பேசாமலிருக்கலாம், பணத்தைக் கொடுக்கிறேன் எனக் கூறலாம். அவர் ஒரு தீவிர முடிவு எடுத்தார்.

  • இது என் செலவு. நான் இதை ஏற்க வேண்டும்.
    எவருக்கும் இப்பொறுப்பில்லை எனத் தீர்மானம் செய்தார்.
     

25 வருஷமாக £ 2000 வருஷ செலவு செய்கிறார். கை மீதியில்லை. இவருக்கு 50 வயது. சொத்து இவருடையதில்லை. அதன் மீது கடன் வாங்கும் உரிமையில்லை. கொடுப்பதாக முடிவு செய்தால் ஓரிரு ஆண்டில் முடியும். 5 ஆண்டில் கொடுப்பதானால் ஆண்டுக்கு £ 1000 மிச்சம் பிடிக்க வேண்டும். செலவைப் பாதியாக்க வேண்டும். இன்று மாதம் ரூ.50,000 செலவாகும் வீட்டில் 25,000 மிச்சம் பிடித்தால் எப்படியிருக்கும்? அது எளிய காரியமில்லை.

  • அந்தப் பெரிய முடிவை ஆழமாகப் பென்னட் எடுத்தார்.
  • அது அவர் மனத்தில் உண்மை.

உண்மைக்கு சக்தியுண்டு. என்ன ஆயிற்று? விஷயம் வெளி வந்துவிட்டது. பணத்தை டார்சி கொடுத்துவிட்டார். அது பென்னட்டுக்குத் தெரியக்கூடாதுஎன்றார். பென்னட் பொறுப்பு டார்சியிடம் போய்விட்டது. டார்சி எலிசபெத்தை மணந்தார்.

  • எப்படியோ காரியம் முடிந்தது, இனிக் கவலையில்லை என்ற பொறுப்பற்ற நோக்கத்திற்குப் பதிலாக,
  • என் பொறுப்பை நான் அவசியம் ஏற்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி செய்தவை இரு காரியங்கள்.
    1. இவர் பொறுப்பை டார்சி ஏற்றார்.
    2. டார்சியே மருமகனாகிவிட்டார்.
    முடிவு முழுமையானால் தானே தன்னைப் பூர்த்தி செய்தும், மேலும் ஒரு பலனும் வந்தது.

********



book | by Dr. Radut