Skip to Content

1. நன்றியை எதிர்பார்ப்பது

நன்றியை எதிர்பார்ப்பது

நன்றி மறப்பது நன்றன்று எனக் கூறியவர் நன்றியைப் பற்றி 10 கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

  • நன்றியை எதிர்பார்ப்பது தவறு என எவரும் கூறவில்லை.
  • கடலில் விழுந்து மூழ்குபவரைக் காப்பாற்றியவருக்கு பிழைத்தவர் நன்றி கூறவில்லை.
  • இழந்த முதலை மீண்டும் பெற்றுக் கொடுத்தவர் நன்றி பெறவில்லை.
  • அழிந்த வாழ்வை உயிர்ப்பித்துக் கொடுத்தவரைப் பிழைத்தவர், நீங்கள் ஒருவர் மட்டும் உதவ மறுக்கிறீர்கள் என்றார்.
  • 30 ஆண்டு வருமானத்தை 1 ஆண்டில் பெற உதவியவருக்கு நன்றி கூறுவது தவறுஎன ஒருவர் நடந்து கொண்டார்.
  • இழந்த சொத்தை சர்க்காரிடமிருந்து காப்பாற்றிக் கொடுத்தவர் சொத்தைப் பலன் பெற்றவர் நாணமின்றிக் கேட்டார்.
  • வேலையைக் காப்பாற்றி, வாழ்க்கை தடம் மாறிப்போவதை தடுத்தவர் வேலையை அழிக்க ஒருவர் ஆர்வமாக நின்று வென்றார்.
  • ரூ. 27,000, 81,000 ரூபாயானது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி. நான் அதை அடிக்கடி பல்வேறு கோணத்தில் எழுதியுள்ளேன். இன்று நன்றியை எதிர்பார்த்தால் மனம் புண்படும்படிப் பேச்சு எழும் என்று எழுத விரும்புகிறேன்.

12 மணிக்கு 27,000 ரூபாய்க்கு விலை முடிந்ததை
4 மணிக்கு 81,000 ரூபாய்க்கு விற்க உதவியவர்
நன்றியை எதிர்பார்ப்பது தவறா?
தவறு என அறிவுறுத்தி பெற்றவர்
உதவியவர் மனம் புண்படும்படிப் பேசினார்.

 

******



book | by Dr. Radut