Skip to Content

09. மனிதமையத்தின் மகத்துவம்

மனிதமையத்தின் மகத்துவம்

கர்மயோகி

  • சத்திலிருந்து ஜடம் வரை நம்முள் அனைத்துமிருந்தாலும், ஒரேயொருயிடமே நடைமுறைக்குப் பயன்படும் வகையில் அமைந்துள்ளது.
  • ஆன்மா முதல் ஜடம்வரை இவை அடுக்கடுக்காக அமைந்துள்ளதில் அவற்றின் சூட்சுமலோகங்களும் உடன் உறைகின்றன.
  • நேரம் கருதி ஆழம் மேலே வரும்.
  • பெரிய மனிதனுக்கு அது அதிகமாக வரும், அடிக்கடி வரும்.
  • வேலையில் உள்ள பொறுப்பு, தீவிரம், திறமையைப் பொறுத்து ஆழம் மேலே வரும். அடிக்கடி வருவது மேலே நின்றுவிடுவதும் உண்டு.
  • அலட்சியமானவன் இந்த அம்சத்தைப் பொருட்படுத்தமாட்டான்.
  • சமர்ப்பணத்தை ஆழத்தில் நிலைநிறுத்தினால் ஆழம் மேலே வந்து சிறியவன் பெரியவனாக நிலையாக மாறுவான்.
  • இதைச் சாதிப்பதற்கும் சமர்ப்பணம் பயன்படும்.
  • சமர்ப்பணம் அன்னையையடைய உதவும் என்பது மட்டுமன்று. எதையும், எவரையும், எந்த நேரத்தையும், எந்த அசைவையும் அன்னையாக்க வல்லது சமர்ப்பணம். அகத்தைப் புறமாக்கி, புறத்தை அகமாக்கி, இரண்டையும் ஒன்றாக்குவது சமர்ப்பணம்.
  • மனிதமையம் பிரபஞ்சம்போல் கோடிக்கணக்கான மையங்களாகி, மையம் மகிமையாகும்.
  • சமர்ப்பணத்திற்குப் பலன் உண்டு, முறையுண்டு, மூலம் உண்டு.
  • பலனிலிருந்து முறைக்குப் போனால், ஞானம், சக்தியுள்ள ஞானமாகும். முறையிலிருந்து மூலத்திற்குப் போனால் திருவுருமாற்றம், இரஸவாதமாகும். சமர்ப்பணம் சரணாகதியாகி முடிவில் அகமும், புறமும் இணைந்த ஒன்றான பிரம்மமாகும்.
  • அன்னையே முறை. முறையே அன்னை.
  • அனைத்தும் அன்னை.
  • செயலை சமர்ப்பணமாக்கி, சமர்ப்பணத்தை சரணாகதியாக்கி, சரணாகதி புறத்திலிருந்து அகத்திற்குப் போய், அகமும் புறமும் இணைந்து, இணைந்தவை பரிணாமத்தால் இறைவனாகி, இறைவன் அருளாகி, அன்னையாக நம்மை வந்து பேரருளான வாழ்வாவது பக்தி. பக்தியில் ஆரம்பித்த யோகம் முடிவில் பரமனாவது யோகம் சித்திப்பதாகும்.
  • மனிதமையம் மகிமை நிறைந்த அன்னையின் உலகமாவது ஆண்டவனின் திருவுள்ளம்.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பிரச்சினையைத் தீர்க்கும் ஆர்வத்தைவிட, அன்னையை நாடும் ஆர்வம் அதிகமானால் பிரச்சினை தீரும்.
 
பிரச்சினை அன்னைக்குட்பட்டது.
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பகுத்தறிவுவாதிக்கும், மத வழிபாட்டை நாடுபவனுக்கும் ஆன்மீக திருஷ்டியை எடுத்துச் சொல்பவை சிந்தனை மணிகள்.
 
******



book | by Dr. Radut