Skip to Content

04. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

 • கொடுப்பதால் பெருகும்
  • (Growing by giving) கொடுப்பதால் பெருகும்.
   இது முரண்பாடாகத் தெரிகிறது.
   சிறியது வளரப் பெறுகிறது.
   பெரியது வளரக் கொடுக்கிறது. ஜடம் வளரப் பெற வேண்டும்.
   Physical grows by taking - சாப்பிட்டு உடல் வளரும்.
   Mental grows by giving - மனம் வளரக் கொடுக்கிறது.
   கொள்ளத்தான் குறையாது கல்வி. கல்வியைக் கொடுக்கக் கொடுக்க வளரும்.
   ஆத்மாவால் கொடுக்கமட்டும் முடியும், பெற முடியாது.
   The Spirit can only give. Giving makes it grow .
   ஊற்று நீரைத் தரும், தொடர்ந்து தரும், திரும்ப அதனால் பெற முடியாது.
   (Love can only give. It is incapable of taking. Even its taking is a giving).
   அன்பு கொடுக்கும், தன்னையே கொடுக்கும்.
   அதனால் பெற முடியாது, பெறுவதும் அன்பே.
   அறிவில்லாதவன் தன் "அறிவை” அறிவாளிக்குக் கொடுத்தால் அறிவாளி அதைப் பெறுவது தியாகம். He gives by such taking.
   ஏழை கொடுப்பதை செல்வன் ஏற்பதும் அப்படியே.
   To grow by giving one rises from a low position to a higher position.
   To listen to a fool patiently is a sacrifice. This 'taking' is really a giving.
   Infinity என்பதை நடைமுறையில் அறிவது யோகம்.
   Infinity கொடுத்தால் குறையாது.
   கொடுப்பதால் வளர Infinityயாக இருக்க வேண்டும்.
   காமதேனு, அக்ஷய பாத்திரம், கற்பக விருக்ஷம் அது போன்றது.
   Growing by giving நாம் அக்ஷய பாத்திரமாக வேண்டும்.
   பல மடங்கு பெருகினால், பெருகாமலிருப்பது என்ன?
   அளவு பெருகும் தரம் உச்சத்தை எட்டினால் பெருகாது, பெருக முடியாது.
   தான் வளர பிறரை வளர்ப்பது ஆத்மா.
   காந்திஜி மற்றவர்களை வளர்த்தார்.
   தன்னை வளர்த்துக்கொள்ளவில்லை. அது பெரிய ஆத்மா.
   மகாத்மாவுக்கு வளர்ச்சியினியில்லை.
   அளவு கடந்து வளர்வது அனந்தம்.
   அந்தமும், ஆதியுமில்லாதது எப்படி வளரும்? எப்படி குறையும்?
   வளர்ச்சியும், தளர்ச்சியுமற்றது பிரம்மம்.
   வாழ்வில் நாம் பிரம்மமாவது ஸ்ரீ அரவிந்தம்.
 • அன்னை பக்தராக இருப்பது பாக்கியம்
  • பெரியது பெரியதுதான், சிறியது சிறியதுதான்.
   காந்தியும், நேருவும் பெரியவர்கள், பெரிய ஆத்மாக்கள்.
   நம் தகப்பனாரும், தாயாரும் சிறியவர்கள்என்பது தெளிவு.
   காந்தி மகன் அவர் இறக்கும்பொழுது விபசார விடுதியிலிருந்தான்.
   பெரியவர் மகன் செய்யும் சிறிய தப்பு, பெரிய தப்பு.
   இந்திரா நேருவின் பெண்.
   இந்திரா எமர்ஜென்ஸி கொண்டுவரக்கூடாது.
   அது மகன் உயிரை எடுத்தது.
   பல ஜென்ம புண்ணியத்தால் ஆசிரமம் வந்தவர் புண்யாத்மாக்கள்.
   எவ்வளவு பெரிய அருள் Grace ஆனாலும் க்ஷணத்தில் செலவாகும்.
   "குந்தி தின்றால் குன்றும் மாளும்' - பழமொழி.
   அன்னை அளித்த பேரருளை அனைவரும் இழந்தனர்.
   முன்னாள் முதலமைச்சர் "பாவம்” பரிதாபம்.
   அருள் Grace க்ஷணத்திற்கு க்ஷணம் உயிர் பெறுவது, க்ஷணத்தில் உயிரை இழப்பது.
   பால் அமிர்தம். அடுத்த நாள் அது முறியும்.
   எல்லாப் பெரிய காங்கிரஸ் தலைவர் மகன், பேரன்களும் இலஞ்சம் வாங்கி அழிந்தனர்.
   எந்த நிமிஷமும் விழிப்பாக இருப்பது அவசியம்.
   எவ்வளவு பெரியவர் என்பதைவிட உயிர் - ஆத்மா - உண்டா என்பதே முக்கியம்.
   சித்தி பெற்றவர் உடலும் அழியும் (decompose).
   அருள் Grace உயிரோடிருக்க ஒரு பொய் சொல்லக்கூடாது.
   ஒரு பொய் 100 ஜென்மப் புண்ணியத்தை அழிக்கும்.
   இது மனிதன் செய்யும் யோகமில்லை.
   இறைவன் செய்யும் யோகம்.
   நமக்கு, சரணாகதி மட்டுமே உரிமை.
   நாணயம், விஸ்வாசம், தூய்மை, கற்பு ஆகியவை ஒரு முறை தவறினால், போகும்.
   ஆத்மா தூய்மை அதனினும் மென்மை delicate ஆனது.
   அதை நம்மைப்போல் பயன்படுத்தினால் குறத்தி மணாளனாக மாறுவான்.
   யோகம் பயில்வது பெரும்பாக்கியம்.
   அதைச் சரிவரச் செய்து தொடர்வது பெருஞ்சிரமம்.
 • சந்தோஷம், குதூகலம், ஆனந்தம்
  (Happiness, pleasure, joy, bliss, Delight)
  • Success and happiness are sought by the lower vital says HE
   பிராணனின் தாழ்ந்த பகுதி வெற்றி, சந்தோஷத்தைத் தேடுகிறது என்கிறார் பகவான்.
   (Pleasure) சந்தோஷம் உடலுக்குரியது.
   (Joy) சந்தோஷம் உணர்வுக்குரியது.
   (Bliss is of the soul, is the static joy).
   (Bliss) ஆனந்தம் ஆத்மாவுக்குரியது.
   (Delight is the bliss of the evolving soul).
   (Delight) ஆனந்தம் வளரும் ஆன்மாவுக்குரியது.
   (Bliss) ஆனந்தத்தை பாங்க் டெபாசிட்டுக்கு ஒப்பிடலாம்.
   பணம் பெற்றிருப்பதில் ஒரு நிறைவுண்டு.
   பணத்தை ஒரு கம்பனியில் முதலீடு செய்தால் அது பெருகும்.
   இதை வளரும் ஆனந்தத்திற்கு (delight) ஒப்பிடலாம்.
   Bliss ஆனந்தம் அமைதியானது. Delight ஆனந்தம் செயல்படுவது.
   மோட்சம் அசையாத பிரம்மத்தில் ஆத்மா கரையும் இன்பம்.
   ஆத்மா உலகில் அற்புதமாகச் செயல்படும்பொழுது பெறும் இன்பம் (active joy) ஆனந்தம் delight எனப்படும்.
   இக்கருத்து - delight - நம் மரபு அறியாதது.
   பகவான் பிறக்கும்வரை மனிதன் பெற்ற கருவி மனம்.
   மனம் பகுதியானது.
   இது பிரம்மத்தின் பகுதியை அறியும்.
   அது அறிந்தது அசையாத பிரம்மம்.
   மனம் பிரம்மத்தை பிரம்மாண்டமாகக் கண்டது.
   பகவான் மனத்திலிருந்து உயர்ந்து சத்தியஜீவியம் சென்றார்.
   சத்தியஜீவியத்தால் மனத்தால் காண முடியாததைக் காண முடியும்.
   சத்தியஜீவியம் அசையாத பிரம்மமும், அசையும் பிரம்மமும் சேர்ந்த முழுபிரம்மத்தை அறியும்.
   முழுபிரம்மத்தில் தீமை, இருள், வலி, மரணமில்லை. முழுபிரம்மம் வளர்கிறது. அதுவே ஆன்மீகப் பரிணாமம்.
   அதை அற்புதம் Marvel என்கிறார் பகவான்.
   நாம் மனத்திலிருந்து சைத்தியபுருஷனுக்கு Psychic beingக்குப் போனால், அவ்வற்புதம் தெரியும். அதில் வேண்டாதது negative இல்லை.
   அப்படி ஸ்ரீ அரவிந்தர் கண்டது நாராயண தரிசனம்.
   அன்பர்கள் பிரச்சினை தீரும்பொழுது ஒரு க்ஷணம் அதைக் காண்கின்றனர்.
   ஆனால் அது புரிவதில்லை.
   அதனால் தோல்வி வெற்றியாகத் திருவுருமாறுகிறது.
   மனம் அல்பத்திலிருந்து பெரியதானால் தோல்வி வெற்றியாக மாறும்.
   அப்பொழுது பெறுவது வளரும் ஆனந்தம் delight.
 • பெருந்தன்மை, கயமை
  • பிறரால் முடியாததை அவருக்குச் செய்து தருவது பெருந்தன்மை.
   நம்மால் முடியாததை, பிறரைச் செய்யச் சொல்வது கயமை.
   நம் செயலில் பெருந்தன்மையும், கயமையும் கலந்திருக்கும்.
   கயமை குறைந்து செயல் முழுவதும் பெருந்தன்மை ஆனால், மனிதச் செயல் தெய்வச் செயலாகும். அது ஆனந்தம் தரும்.
   டார்சி எலிசபெத் திட்டியதை உண்மையென ஏற்று அவள் திருப்திப்படும் அளவுக்கு மாறி அவள் மனம் விரும்ப நடக்க முயன்றான்.
   அது திருவுருமாற்றம்.
   அவள் அந்த முயற்சியை அந்த அளவுக்கு எடுக்கவில்லை.
   அவள் கோபமாகத் திட்டினாலும், கோபத்தை விலக்கி அதன் பின்னுள்ள உண்மையை ஏற்க முயன்றது அவன் சரணாகதி.
   அவள் பெம்பர்லியை ஏற்பது அவனுக்கு முக்கியம்.
   அவள் கூற்றிலுள்ள தவறு அவனுக்குப் பொருட்டன்று.
   தன் குறைமட்டுமே அவன் பொறுப்பு.
   அதற்காக மனம் மாறினான். அது தலைகீழ் மாற்றம்.
   எவன் பெயரைக் கேட்க அவன் காது கூசுமோ அவனை சகலராக ஏற்றான்.
   பிங்லியிடம் மன்னிப்புக் கேட்டான்.
   லிடியாவை ஏற்றுக்கொண்டான்.
   மிஸஸ் பென்னட்டைப் பொறுத்துக்கொண்டான்.
   அவள் - எலிசபெத் - சந்தோஷப்பட்டால் போதும் என நினைத்தான்.
   அவன் திருவுருமாற்றத்தைத் தீவிரமாகப் பயின்றான்.
   எலிசபெத்தை மணப்பது அவனுக்கு யோகமாக முடிந்தது.
   அவளும் மாறினாள். அவள் பெம்பர்லியை ஏற்றாள்.
   அவன் அவளை நாடினான்.
   அந்த அளவு மாறினாள்.
   அவன் பிரியத்தை ஏற்குமளவு மாறினாள்.
   அவளுக்கு அவன் மீது பிரியம் வரவில்லை.
   தன் தாயார், தங்கைகளைக் கண்டு அவள் வெட்கித் தலை குனியவில்லை.
   அவள் மனம் அவனால் மாறவில்லை, பெம்பர்லியால் மாறியது.
   அவளுக்கு யதார்த்தம்.
   அவனுக்கு இலட்சியம்.
   அவள் கயமை குறைந்து பெருந்தன்மையால் நிறைந்தது.
   அது மனம் மலரச் செய்வது அற்புதம்.
 • சுந்தரம் புற அழகு
  • லாவண்யம் அக அழகு.
   புறம் அகத்தின் பகுதி.
   புறம் அகத்தின் மறுபுறம், எதிராகவுமிருக்கும்.
   அகம் புறத்தை ஆழ்ந்து பிரதிபலிப்பது ஆத்ம சித்தி.
   புறமும் அகமும் எதிராக ஆரம்பித்து, பிரதிபலிப்பாக மாறி, முடிவாக அகம் புறத்தைத் தன் பகுதியாக ஏற்கும்.
   பண்பு அகம், பணம் புறம்.
   பணத்தை புறத்தில் சம்பாதித்தால் வருவது பணம், பதவி.
   பணத்தை அகத்தில் பண்பால் சம்பாதித்தால் வருவது பக்குவம்.
   எந்த வேலை செய்தாலும் அது பணம்.
   செலவும் பணம்.
   பணம் வரும் கதவைமட்டும் கவனித்தால் பணம் சிரமப்பட்டு வரும்.
   வேலையைக் கவனித்தால் பணம் எல்லாக்கதவுகளையும் திறந்து கொண்டு ஏராளமாக வரும்.
   மனம் புறத்திலிருந்து அகத்திற்கு வருவது அருளைக் கடந்த பேரருள்.
   ஏராளமாக வரும் பணம் எல்லாவழிகளிலும் வரும்.
   பக்குவத்தால் வரும் பணம் பவித்திரமான பணமாக மட்டுமிருக்கும்.
   அளவு புறம், தரம் அகம்.
   அகம் சம்பாதிக்கும் அணு, புறத்தின் அனந்தம்.
   அகத்தில் பணத்தைச் சம்பாதிக்கவும் புறத்தின் அடிப்படை வேண்டும்.
   அழகு, பணம், ஆனந்தம் ஆகியவற்றிற்குச் சட்டம் ஒன்றே.
   பணம் திறமையால் வரும் - சித்.
   அழகு ஆனந்தத்தால் வரும் - ஆனந்தம்.
   பணமும் அழகும் சத்தியத்தால் வரும் - சத்.
   சத்தியம் சகலத்தையும் நித்தியமாக்கும்.
   அகத்தின் ஆன்மா, புறத்தின் சத்தியம்.
   ஆன்மாவுக்கு அருகிலுள்ள வாயில் சத்தியம்.
   புறமும் அகமும் சந்திப்பது மனத்தில்.
   மனத்தைக் கடந்தது சத்தியம்.
 • மோட்டார்பெல்ட் மானேஜர் மீது பெருவேகத்திலடித்தது. இது எனது பெரிய அனுபவங்களில் முக்கியமான ஒன்று.

  பெல்ட் ஓடும் வேகத்தில் அறுத்துக்கொண்டு அடித்தால் வலி உயிர் போகும்.
  உயிரே போவதும் உண்டு.
  அவருக்கு உடல் ஆனந்தப்பட்டதாம்.
  இதற்கு ஆன்மீக அர்த்தமுண்டு.
  ஆத்மா ஆழத்திலிருப்பதால் அது வெளிவர கடுமை தேவைப்படுகிறது.
  முதிர்ந்த ஆத்மாக்கள் மெல்லிய உணர்வுடையவராக இருப்பார்கள்.
  ஆணி படுக்கை மீது படுப்பது, சாட்டையால் அடித்துக் கொள்வது, பட்டினி கிடப்பதுபோன்ற கொடூரமான பழக்கங்கள் குழவி ஆத்மாவுக்குத் தேவை.
  பண்பானசொரணை, ஆன்மீகச் சொரணை, மனத்தில், உணர்ச்சியில் சொரணை ஆகியவை மனிதரின் தரத்தைக் குறிக்கிறது.
  வெட்கம், வெட்கமில்லாதவன், வெட்கங்கெட்டவன்என்பது, அவமானத்தை உணராத அற்புதமான ஆத்மாக்களை "மானம் கெட்டவன்'' என்கிறோம். அவர்கள் "புனித ஆத்மாக்கள்''.
  இதை 1 முதல் 10 வரை அளவுகோலாக எழுதி மனிதர்களைப் பிரித்தால் நமது அறிவு அதிகமாகும்.
  காலின்ஸூக்கு வெட்கமில்லை.
  விக்காமுக்கு வெட்கமில்லை.
  இரண்டும் வேறு வேறு வகைகள்.
  டார்சி எலிசபெத்திற்காக வெட்கத்தைவிட்டு லிடியாவைத் தேடி, விக்காம் உடன் பேரம் பேசி காரியத்தை முடிக்கிறான்.
  அது ஒரு வகை.
  மிஸஸ் பென்னட் இப்பவும் Red Coatஐப் பார்த்தால் எனக்கு நெஞ்சு பதைக்கிறது என்பது வேறு வகையாக வெட்கம் கெட்ட நிலை.
  மிஸஸ் பென்னட் பெண்கள் எவரும் ஏற்க முடியாத காலின்ஸை ஷார்லோட் விரும்பி ஏற்பது அவள் நிலை.
  அந்த வகையில் அளவுக்கு மிஸஸ் பென்னட் குழந்தைகட்கு உரிய வெட்கமில்லை.
  லஜ்ஜை என்பது வேறு.
  நல்ல மனம், கெட்ட எண்ணம், பெருந்தன்மை, பொறுமை போன்ற குணங்களை 1 முதல் 10என எழுதி நமக்குத் தெரிந்த பழக்கங்களை வரிசைப்படுத்தினால் அறிவு, மனம், உணர்வு, ஆத்மா வளரும்.
  உறவினர், மானேஜர், குரு, தலைவர், நண்பர் ஆகியவர் வெட்கத்தைவிட்டுப் பழகும் நேரத்தைக் கண்டோம்.
  அவர்கள் எல்லாம் ஒரே தரத்தைச் சார்ந்தவர்கள். மாறிய தரமானாலும் ரகம் ஒன்றே.
  துரோகம் செய்வது, ஏமாற்றுவது, பொய் சொல்வது ஆகியவை ஓர் அளவுகோலைச் சேரும்.
  துரோகம் செய்த நண்பரை என்னுடன் ஒரு பர்லாங் நடக்க வைத்தார் அன்னை.
  பார்ட்னர் கேஸ் போட்டவரை அவர் சரக்கை விற்றுக் கொடுக்கும்படிக் கேட்க வைத்தார்.
  உயிரை எடுத்து, நூறு வகைகளில் துரோகம் செய்த குருவை நாம் நண்பர்கள்எனச் சொல்ல வைத்தார்.
  அமெரிக்கர் ஏராளமான பலன் பெற்றவர் மட்டமாகப் பேசினர்.
  போர் முதலியாரை - 30 வருஷ வருமானம் பெற்றபின் - விறைப்பாகப் பேச வைத்தார்.
  இவற்றிலெல்லாம் அன்பருக்குரிய முக்கியத்துவம் உண்டு. அதை அன்பர் காண வேண்டும்.

தொடரும்....

******

 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தோல்வியின் காரணத்தைப் புற நிகழ்ச்சிகளில் காண்பது தன்னைத் திருத்த மறுப்பதாகும்.
 
புறத்தைக் கருதினால் அகம் இருளும்.

 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
"உலகத்துடன் ஒன்றி ஆனந்தம் பெறுவது மனிதனுக்கு ஆன்மாவில் ஜடத்தை ஆளும் திறனையளிக்கும்'' என்கிறார் பகவான்.
 
இதையே வாழ்வில் பொருத்திப் பார்க்கலாம்.
 
தன் சூழ்நிலையைப் பூரணமாக அறிந்து, அதனுடன் ஒன்றிப்போக முடிந்தால் மனிதனுக்கு அச்சூழ்நிலை கட்டுப்படும். (i.e. பணம் அவனை நோக்கி வரும்; மார்க்கட் அவனை நாடும்; எல்லாச் செயல்களும் பூரணச் செயல்களாகும், வெற்றியை மட்டும் தருவனவாகும்).
 
தானறியும் சூழ்நிலை தனக்குக் கட்டுப்படும்.
 
******

 book | by Dr. Radut