Skip to Content

1. சம்பந்தம்

சம்பந்தம்

சிறு விவசாயக் குடும்பம். அண்ணன், தம்பி இருவர். உடன் பிறந்த பெண்கள் மூவர். இவர்களுடைய பெண்கள் மூவர். ஐந்து பெண் பிறந்தால் அரசனும் ஆண்டியாவான்என்பது பழமொழி. ஜில்லாவின் அடுத்த பகுதியில் 6 பேர் சகோதரர்கள். அவர்கள் பெற்றது 1000 ஏக்கர். அவர்களில் மூத்தவர் இக்குடும்பத்தில் பெண் எடுத்தார். இப்பெரிய குடும்பச் சம்பந்திகள் அடுத்த இரு பெண்களை மணந்தார்கள். முதல் பெரிய குடும்பம் மற்றொரு பெண்ணையும் 3ஆம் பிள்ளைக்குத் திருமணம் செய்தனர். அதே குடும்பத்தில் அச்சிறு குடும்பத்து அடுத்த தலைமுறை 3 பெண்களையும் மணந்தனர்.

  • பெரிய குடும்பம் பெரிய குடும்பத்தில்தான் சம்பந்தம் செய்யும்.
  • சிறுகுடும்பத்தைப் பெரிய குடும்பம் நாடாது.
  • அப்படி ஒரு சம்பந்தம் செய்தபின் அடுத்த பெண்ணை எடுக்க முதலில் வந்தவள் மகாலட்சுமியாக இருக்க வேண்டும்.
  • பணமுள்ளவர் பணத்தை நாடாமல் எதை நாடி வருகின்றனர்?
    பண்பை நாடிவர பணமுடையவன் சம்மதிக்கமாட்டான்.
    பண்பை நாடி 6 முறை வர அது பவித்திரமான பண்பாக இருக்க வேண்டும்.
    பண்பும் பவித்திரமும், பக்குவத்திற்குடையவை.
  • இந்தியப் பரம்பரை, தமிழ்ப் பண்பு பணத்தை நாடாமல் பண்பைப் பல முறை நாடும் அளவிருக்கும்படி அமைவது பல தலைமுறை வரை

    "பெரிய வீடு'' என அழைக்கப்படுகிறது.

    பணம் அழிந்த பின்னும் அழியாத பண்பு பெரிய வீட்டிற்குரியது. அவர் அன்பரானால் அதே பணம் ஆயிரம் மடங்காகத் திரும்ப வரும்.

*****



book | by Dr. Radut