Skip to Content

15. அஜெண்டா

"Agenda"

Mother has a sensation of being in the presence of the Absolute

பிரம்மத்தின் முன்னிலையில் நிற்கும் உணர்வு பெற்றார் அன்னை

  • இடையறாது பிரம்மத்தின் முன்னிலையில் தெய்வீக ஆன்மா உள்ளது என்பது Life Divineஇல் உள்ள ஒரு வாக்கியம்.
  • அந்த நிலையையெய்த தெய்வீக ஆன்மாவின் தகுதிகள்:
    1. அது சச்சிதானந்தத்துள் உறைகிறது.
    2. ஏகனிலும் அநேகனிலும் ஒரே சமயத்தில் உறைகிறது.
    3. அதன் ஞானத்திற்கும் உறுதிக்கும் பிணக்கில்லை.
    4. அஞ்ஞானத்தினின்று முழுவதும் வெளிவந்துவிட்டது.
    5. பரிணாமத்தால் சத்தியஜீவியம் பெற்ற நிலையை தெய்வீகஆன்மா சிருஷ்டியிலேயே பெற்றுள்ளது.
    6. அதன் பார்வைக்கு சிருஷ்டி அற்புதம், பிரம்மஜனனம், ஆனந்த மயம்.
    7. தெய்வீக ஆன்மாவிற்கு ஜடமான உடலில்லை, சூட்சுமமான ஜீவியமுண்டு.
    • அன்னை பகவானை 1914இல் சந்திக்கும் பொழுது கீதையின் யோகத்தை டித்துவிட்டார்.
    • கீதையின் யோகம், ராஜ யோகத்தைக் கடந்தது. பகவான் ராஜ யோகத்தை மூன்று நாளில் முடித்தவர். பகவான் முதல் அன்னையை சந்தித்த பொழுது அகண்ட மௌனத்தை அன்னைக்கு ஆன்மீகப் பரிசாகக் கொடுத்தார். அம்மௌனம் அன்னையுடன் கடைசிவரைக்குமிருந்தது. பகவான் அன்னையின் கணவருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அதைச் செய்தார்.
    • பிரம்மத்தின் முன்னிலையிலிருப்பது பெரியது. அதை உணர்வது அதனினும் பெரியது. பணத்தைப் பெட்டியில் வைத்திருப்பவன் பணத்தின் பெருமையை உணர முடியாது. அதை எடுத்து செலவு செய்யும்பொழுது பணம் "நான் இருக்கிறேன்'' என்று உணர்வாகக் கூறும். மேடையில் அற்புதமாகப் பேசுவது வேறு. பேசி முடித்தவுடன் நீண்ட கை தட்டல் பேச்சின் முக்கியத்துவத்தை ஒயாக எடுத்துக் கூறுகிறது. பெரும்பணக்காரருக்குச் செல்வாக்குண்டு. அவரே முதன் மந்திரியானால் அந்தச் செல்வாக்குச் செல்வதை உணர்வாக அறிவார். மாநிலத்தில் முதல்வனாக பாஸ் செய்து வீட்டிற்கு வந்தபின் அக்கம் பக்கத்திலுள்ளவர் பொறாமையால், அல்லது அறிவீனத்தால் அதைக் கண்டு கொள்ளாவிட்டால், "சப்" என இருக்கும். இரயில்வே ஸ்டேஷனில் வரவேற்பு கொடுத்து, பார்ப்பவர் எல்லாம் பாராட்டி, பாராட்டுவிழா நடத்தினால், அறிவின் சாதனை உணர்வாக வெளிப்படும்.
      • பெறுவது வேறு.
      • உணர்வது வேறு.
      • பாசம் வெளிப்படும் பொழுதுதான் உணர்ச்சியைத் தொடும்.
      • உணர்ச்சியைத் தொட்டால்தான் அது உயிர் பெறும்.
      • மோட்சம் பெறும் ஆத்மா கரைந்து மறைவதால் அது எதையும் உணர முடியாது.
      • தெய்வீகஆன்மா மேலுலகிலும், பூவுலகிலும் நின்று நிலைபெற்று பிரம்மத்தின் சந்நிதானத்திருப்பது உடலில் உள்ள எந்த ஜீவனும் இதுவரைப் பெறாத ஆன்மீகப் பேறு.

*****



book | by Dr. Radut