Skip to Content

11. யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

 1. (Physical organisation) வாழ்வின் அமைப்பு மனிதனுடைய மையம். மௌனமான ஆழ்மனத்தின் செயல் உயிரைக் காப்பாற்றக்கூடியது அல்லது வாழ்வுள்ள நிலையில் அனுபவிப்பது. கலையுணர்வும், அறிவின் ஆராய்ச்சியும்கூட அதனால் ஒதுக்கப்படுகிறது. தன் போக்கை (occupation) அனுபவிக்க மனிதன் ஒதுக்கிய செயல்கள் திடீரென முளைத்து குறுக்கிட்டு அவனுடைய முக்கிய வேலையில் எழும். அதுவும் அவ்வேலை அவனுக்குப் பிடிக்காத நேரத்தில் எழும். இதுபோல் பேரிலக்கியம் எழுவதுண்டு.

  விரும்பி ஒதுக்கும் சக்தி திரும்பி வந்து பேரிலக்கியம் எழுதியதுண்டு.

  • மனிதன் ஒரு வகையாகப் பார்த்தால் வளர்ந்த குழந்தை.
  • பொதுவாகப் பணம் வந்தால் தன் கட்டுப்பாடு விலகி, குழந்தை மனப்பான்மை வெளிப்படும்.
  • அப்படி முதலில் மனிதன் செய்தது பல மனைவிகளை மணந்தது.
  • அந்தப்புரமில்லாத அரசனில்லை.
  • முடியும் என்றால் செய்பவன் மனிதத் தன்மையில்லாத மனிதன்.
  • பணம், பதவி வந்தபின் மனிதத்தன்மை இருப்பது குறைவு. சுயநலம் மிஞ்சும்.
  • சுயநலமும் குழந்தைத்தனமாக இருக்கும்.
  • அர்த்தமற்ற காரியத்தை அளவு கடந்து செய்ய ஆர்வம் அதிகமாக இருக்கும்.
  • எந்த மனிதனையும் அந்தநிலையில் கட்டுப்படுத்த முடியாது.
  • ஊர் கண்டிக்கும் என்றால் கட்டுப்படுவான். இல்லையேல், இல்லை.
  • சுதந்திரம் உள்ள மனிதன் தன் வாழ்வை அவலமாக்குவதில் அவனுக்கு நிகர் அவனே.
  • எல்லா மனிதர்களும் பிரம்மம்.
  • எல்லா மனிதர்களிடமும் அனந்தமான அற்புதமான திறமை, குணமிருக்கும்.
  • அர்த்தமற்ற வேகம் அதையறியாது, வெளிவர அனுமதிக்காது.
  • காளிதாஸனாக வேண்டியவனுக்கும் நுனி மரத்தில் உட்கார்ந்து அடி மரத்தை வெட்டும் ஆர்வம் மேலெழும், செயல்படும்.
  • மனிதனுடைய போக்கை வாழ்வு பெரும்பாலும் அனுமதிக்கும்.
  • அவன் போக்கை மீறி வாழ்வு சிறுஅளவில் செயல்படுவது உண்டு, பேரளவில் செயல்படுவதுண்டு.
  • பேரளவில் செயல்பட்டால் காளிதாசன் பிறப்பான்.
  • சிறுஅளவில் செயல்பட்டால் சர்க்கரை மிட்டாய் சாப்பிட ஆசைப்படும் ஹைகோர்ட் வக்கீலாவான்.
  • பெர்னார்ட் ஷா கதையில் புரொபசர் ஹிக்கின்ஸ், கர்னல் பிக்கரிங்கும் சேர்ந்து ஓர் அழகான, அழுக்கான ஏழைப் பெண்ணை (Duchess) பிரபு வீட்டுப் பெண் போலப் பேச வைக்கின்றனர்.

   புரொபசருடைய திறமை மலை போன்றது.
   கர்னலுடைய பழக்கம் உயர்ந்த பண்பாலானது.
   இருவரும் பக்குவம், நிதானமற்ற இளம் பிள்ளைகள்.

  • நம் நாட்டில் இதுபோன்று (immature) நிதானமற்று இளைஞர்களும் இருக்கமாட்டார்கள்.
   மேல் நாட்டில் மனிதனுக்கு அறிவு வளர்ந்துள்ளது, ஆன்மா இருண்டது.
   மனிதன் தன் அறிவைப் பாராட்டுவான், ஆத்மாவை அறிவது இல்லை.
   70 வயது அமெரிக்கர்கட்கும் நம் நாட்டில் 10 வயது சிறுவனின் நிதானமிருக்காது.
   10 வயது அமெரிக்கச் சிறுவனுக்கும் 70 வயது படித்த இந்தியர் அறிவு உண்டு.
  • நிதானமற்ற மனிதனுக்கும் பெருந்திறன் உண்டு.
   வாழ்வு அதை வெளிக்கொணர முயன்றால், அவனுக்கு அது பிடிக்காது.
   முயன்று தீவிரமாக எதிர்ப்பான்.
   சில சமயம் வாழ்வு ஜெயிக்கும்.
   அப்படி எழுந்த மேதை காளிதாசன்.
   இது எல்லா நிலைகளிலும் உண்டு.
   கண்ணுக்குத் தெரிவது சிறியது.
   பெரியது கண்ணுக்குத் தெரியாது.
   பெரியதை ஒருவன் பாராட்ட முயன்றால் வீடும் ஊரும் உலகமும் எதிர்க்கும்.
   அந்த எதிர்ப்பு இல்லாவிட்டால், அவனே எதிரியாவான்.
   1000 பெரிய மனிதர் வாழ்வைச் சோதனை செய்தால், 500 பேர் வேண்டாவெறுப்பாக ஏற்ற வாழ்வே அவர்களை உச்சிக்குக் கொண்டு வந்திருக்கும்.
   தண்டோரா போட்ட காமராஜ் தலைவரானது அவ்வழியே.
   விஷமியான கிளைவ் சாம்ராஜ்யம் ஸ்தாபித்ததும் அப்படியே.
   போக்கிரியான சர்ச்சில் உலகப் பெருந்தலைவரானதும் அவ்விதமே.
 2. செயல் பல நிலைகளிலுண்டு. அங்கு திறமை பூரணமானால் செயல் பூர்த்தியாகும். திறனான வாழ்வின் அமைப்பு (physical organisation), சக்தியாலான உணர்வின் அமைப்பு (vital organisation), எண்ணத்தாலான மனத்தின் அமைப்பு (mental organisation), ஆன்மீகக் கருத்து (Real-Idea) சத்தியஜீவிய அமைப்பு போன்றதாகும்.

  செயல் தன்னைப் பல நிலைகளில் பூர்த்தி செய்து கொள்ளும்.

  • சக்தி திறமையாகி, செயல் பூர்த்தியாகிறது.
   சக்திக்கு வேகம் உண்டு.
   மரம் வெட்டுவது ஒரு செயல்.
   சக்தி வேகமாகத் தாக்கும்.
   பல காரியங்கள் சேர்ந்து மரம் வெட்டி முடிக்கப்பட வேண்டும்.
   அதற்குத் தாக்கும் சக்தி போதாது.
   சக்தியைப் பயன்படுத்தும் அறிவு தேவை.
   தாக்கும் சக்தி வெட்டும்.
   வெட்டியபின் விழுவது ஆபத்து விளைவிக்காமலிருக்க முன் யோசனை வேண்டும்.
   பல பக்கங்களிலும் தாங்கிப் பிடிக்க வேண்டும்.
   அறிவு செயல்பட்டு, திறமையாகி, சக்தியைப் பயன்படுத்தி, மரத்தை வெட்டி முடிக்க வேண்டும்.
  • மேற்சொன்னது எளிய செயல்.
   சம்பந்தப்பட்டது, மரம்.
   பிரச்சினை, அதன் எடை.
   திறமை, அது பாதிக்காமல் பாதுகாப்பது.
   10 பேரைச் சேர்த்து ஒரு முடிவு எடுப்பது அடுத்த நிலைச் செயல்.
   இங்கு, தேவைப்படும் திறமை வேறுபட்டது.
   பலருடனும் இனிக்கப் பழகும் திறமை வேண்டும்.
   மரம் விழும்பொழுது காயம் படாமலிருப்பது எளியது.
   10 பேரில் சிலர் கோபப்பட்டால் காரியம் கெடும்.
   எவர் கோபமும் எழாமல், அவனைவரிடமும் பழகும் திறமை இங்கு அவசியம்.
   மேலும் அப்பத்து பேரும் சம்மதப்பட்டு காரியத்தைச் செய்யும்படி பழகுவது பெரிய திறமை.
   அது உணர்வின் அமைப்பு.
  • வாழை பயிரிட்டால் இலட்ச ரூபாய் சம்பாதிக்கலாம்.
   வாழை பயிரிட்டவர் அதைக் காற்றுக்குப் பலி கொடுத்தனர்.
   அது ரிஸ்க்.
   ரிஸ்க்கில்லாமல் பலன் பெறுவது உடலுழைப்பாலோ, இனிய பழக்கத்தாலோ வாராது.
   அதற்கு அறிவு வேண்டும்.
   அறிவு என்பது ரிஸ்க் தரும் காற்றும், பலன் தரும் குலையும் இணையுமிடம்.
   காற்று மழைக் காலத்தில் அடிக்கிறது.
   வாழை 12 மாதப் பயிர்.
   மழைக் காலத்தில் நட்டால் வாழை நன்கு வளரும்.
   மழைக் காலத்தில் நட்டால், 12 மாதம் கழித்து காற்றடிக்கும் மாதத்தில் குலை தள்ளும்.
   காற்றைக் குலை விலக்க முடியுமா?
   ஆடி மாதம் குலை தள்ளும்படி வாழையை நட்டால், காற்று
   வந்தாலும் இளம் வாழை பாதிக்கப்படாது.
   இது அறிவின் செயல்.
   காற்றால் குலை பாதிக்கப்படும்.
   விலையும் நம்மைப் பாதிக்கும்.
   கரண்டும் பாதிக்கும்.
   தண்ணீர் சப்ளையும் செலவை பாதிக்கும்.
   இத்தனையையும் கலந்து இலாபகரமாகப் பயிரிட அறிவு அமைப்பாக இருக்க வேண்டும்.
   இது mental organization அறிவின் அமைப்பு.
  • எளிய அமைப்பு சிறுபலன் தரும்.
   உணர்வின் அமைப்பு அதிகப் பலன் தரும்.
   அறிவின் அமைப்பு அபரிமிதமான பலன் தரும்.
   வாழை பயிரிடுவதைவிட வியாபாரத்தில் அறிவின் அமைப்பு அமோகப் பலன் தரும்.
   அரசியலில் பலன் மேலும் அதிகம்.
   அறிவால் சாதிப்பதை உணர்வாலும் சாதிக்கலாம், திறமையாலும் சாதிக்கலாம்.
   செயலுக்கும், உணர்வுக்கும், அறிவுக்கும் சூட்சுமம் உண்டு.
   சூட்சுமம் இவற்றையெல்லாம்விட அதிகமாகச் சாதிக்கும்.
   விற்காத சரக்கை இனிமையான பழக்கம் என்ற சூட்சுமம் வியாபாரத்தில் பலன் தரும்.
   இந்த சந்தர்ப்பத்தில் எந்தத் திறமை சாதிக்கும் என அறிவது முடிவான சூட்சுமம்.
   ஸ்டாக் மார்க்கட்டில் எந்தஷேர் விலை ஏறுகிறதோ, அதை
   அனைவரும் வாங்குவார்கள்.
   பெரும்பாலும் இலாபம் வரும், சில சமயம் நஷ்டம் வரும்.
   வாரன் பப்பட் என்பவர் ஷேர் விலையை புறக்கணித்து, கம்பனி
   மதிப்பைக் கண்டு ஷேர் வாங்கினார்.
   50 வருஷமாக அவருக்கு இலாபம் மட்டும் வந்தது, நஷ்டம் வரவேயில்லை.
   இன்று உலகில் முதன்மையான பணக்காரர் அவர்.
   தொழிலில் நஷ்டம் வாராத சூட்சுமத்தை அவர் கண்டுகொண்டார்.
 3. ஒரு நிலையில் அமைப்புச் செறிவடைந்தால், அடுத்த நிலைக்குப் போகும்.

  நிலை செறிந்து, மாறும்.

  ஒரு கடை அதிக வியாபாரமானால், முதலாளி பல கடைகள் ஆரம்பிப்பார். பொதுவாக அவை வெற்றிபெறும். ஏதோ ஒரு சமயம் புதுக் கடைகளை மூட வேண்டியிருக்கும்.

  • முதற்கடை நிர்வாகம் சிறப்பாகச் செறிவடைந்து, நிறைந்து வழிந்தால், புதிய கடைகள் வெற்றிபெறும்.
  • முதற்கடை வெற்றியானாலும், நிர்வாகம் செறிவடையவில்லை (not saturated) எனில், புதிய கடைகள் வெற்றிபெறாது.

  தமிழ்நாட்டுப் பண்புப்படி பிறந்தபெண் கண் கசங்கக்கூடாது. அது குடும்பத்தைப் பாதிக்கும். மேற்சொன்ன இரு உதாரணங்களிலும் சட்டம் ஒன்றே. மூன்று பெண்களுள்ள குடும்பத்தில் முதற்பெண்ணை சம்பாதிக்கத் திறமையற்ற, படிக்காதவருக்குக் கொடுத்தனர். 9 வருஷம் கழித்து இரண்டாம் பெண்ணுக்கு பட்டதாரி மாப்பிள்ளை தேடினர். எல்லா வசதிகளுமிருந்தும் பட்டதாரி வரன் கிடைக்கவில்லை. முதல் நிலை செறிவாகாமல் அடுத்த நிலை பலிக்காது. பிடிவாதமாக பட்டதாரியைத் தேடியதில் 4 வருஷம் கழித்து மட்டமான குடும்பத்தில், திராணியற்ற, திறமையற்ற, வேலையில்லாத பட்டதாரி அமைந்தது. திருமணம் கோர்ட்டிற்குப் போயிற்று. பிரம்மப் பிரயத்தனப்பட்டு நிலைமை 3 ஆண்டுகளுக்குப் பின் சீர்குலைந்து, ஒரு நிலைக்கு வந்தது. அடுத்த பெண்ணுக்கு அடுத்த 3 ஆண்டு போராட்டம். பட்டம் பெறாத வரன் அமைதியாக, அழகாக, சிறப்பாக அமைந்தது.

  • விவசாயம் முதல் நிலை, தொழில் (industry) அடுத்த நிலை. மேற்கூறிய சட்டம் தொழிற்புரட்சியில் செயல்பட்டதை எடுத்துக் கூறியவர் நோபல் பரிசு பெற்றார்.
  • அரசியல், குடும்பம், வியாபாரம், மார்க்கட், கல்வி ஆகிய அனைத்துத் துறைகட்கும் உள்ள சட்டம் இது.
  • ஆயுதம் தாங்கிப் போரிடாமல் இந்தியா சுதந்திரம் பெற்றது. அது உலக அதிசயம். சுமார் 1000 ஆண்டுகளாக இந்தியா பல நூறு சிறு இராஜ்யங்களாகச் செயல்பட்டது. வர்ணாசிரம தர்மம் முதற்சட்டம். முஸ்லீம் படையெடுப்பு 500 அல்லது 600 ஆண்டுகட்குமுன் எழுந்தது. நம் நாட்டில் ஜாதிகள் ஆயிரம், உயர்வு, தாழ்வு, தீண்டாமையுண்டு. முஸ்லீம்கட்குச் சம உரிமையுண்டு. நம் நாட்டைப் பிடித்தனர். மதம் மாற்றினர். கட்டாயமாக மதம் மாற்றினர். இந்தியாவில் தீண்டாதவர் விரும்பி முஸ்லீம் மதத்தைத் தழுவினர். அது அவர்களுள் 1/3 பங்கு. 1947இல் ஆங்கிலேயன் 150 ஆண்டுகட்குப்பின் தானே விலகச் சம்மதித்தான். நாடு பிளவுபட்டது. ஆங்கிலேயன் இரண்டாவதாக வந்தான். முதலில் போனான். அவன் நம் நாட்டுக் கலாச்சாரத்தில் தலையிடவில்லை. முஸ்லீம்கள் முதல் வந்தனர். அவர்களுள் 1/3 பாகம் இந்தியர்கள். தீண்டாமையால் மதம் மாறியவர்கள். தீண்டாமை பாகிஸ்தானை ஏற்படுத்தியது. தீண்டாமை ஒழிந்தால் பாகிஸ்தான் இந்தியாவுடன் சேரும்.

   முன்னிலை நிறைவு பெறாமல் இரண்டாம் நிலை செயல் கூடி வாராது.

  • 1950இல் நிறுவிய கிராமப்புற பள்ளிகள் மூடப்பட்டன. பசி முதற்கட்டம். படிப்பு இரண்டாம்கட்டம். மதியஉணவு வந்தபின்னரே பள்ளிகள் நிறைந்தன.
  • 1965 முதல் பசுமைப்புரட்சி செயல்பட்டு வந்தது. இந்திய சர்க்கார் சிறுதொழில்களை ஊக்குவிக்கச் செய்த 10 அல்லது 20 ஆண்டு முயற்சி வீணாயிற்று. பசுமைப்புரட்சி வெற்றி பெற்ற பின், சிறு தொழில்கள் வெற்றி பெற்றன.
  • 1950 முதல் 5 ஆண்டு திட்டங்கள் செயல்பட்டன. இரண்டாம் திட்டத்தில் உருக்கு ஆலைகள் ஆரம்பித்தனர். நாட்டின் செல்வ நிலை உயரவில்லை.
   • விவசாயம் முதலில், தொழில் இரண்டாவதுஎன்பது சட்டம்.
   • திட்டக் கமிஷன் மீண்டும் அடுத்த திட்டத்தில் விவசாயத்தை ஏற்றுக்கொண்டது.
  • உடல் நலம், நாட்டின் பொருளாதாரம், வீட்டில் வசதி, நாட்டில் கல்வி பரவுவதுபோன்ற எல்லாச் செயல்களிலும் முன்அமைப்பு வெற்றி பெற்றால், அத்துடன் பெருநிறைவு பெற்றால், அடுத்த கட்டம் தானே எழும். நாமே எழுப்பினாலும் பலிக்கும்.
  • மனிதனுக்கும், நாட்டிற்கும், குடும்பத்திற்கும், தொழிலுக்கும், செயலுக்கும், எண்ண நிறைவுக்கும், நட்பின் உறவுக்கும், திருமண நிறைவுக்கும் சட்டம் ஒன்றே.

   

தொடரும்.......

******

ஜீவிய மணி
 
நிஷ்டையில் பெறுவது மோட்சம்.
நிதர்சனமாகப் பெறுவது சத்தியஜீவியம்.book | by Dr. Radut