Skip to Content

09. சாவித்ரி

"சாவித்ரி"

P.9. In a mystical barrage of dynamic Light

      செயலெனும் ஒளி புதிரான தடை

  • பெரிய, உயர்ந்த, வளைவான உலகமெனும் குன்றைக் கண்டான்,
  • மலையேறும் தெய்வரதமாக நிமிர்ந்து நின்றது.
  • விளங்காத வானம் அசைவின்றி அமைந்தது.
  • ஜடமெனும் மாளிகையின் விளிம்பில் ஒளிந்துள்ள பீடம்,
  • கண் மறைவான சிகரம், கடலென விரியும் உலகச் சிற்பம்,
  • நுரைத்தெழும் கடலலை புருஷனை நோக்கி உயர்ந்தது,
  • அளவிலா பரப்பில் அசைந்தெழுந்து உயர்ந்தன,
  • விவரிக்கவொண்ணாத ராஜ்யத்தை நோக்கித் துள்ளி எழுந்தது,
  • அறிய முடியாத அனந்த பிரம்மத்தை நூறு படிகளால் கடந்தது,
  • பிடிபடாத உச்சியைக் கோபுரமாகத் தாண்டியது,
  • பிரம்மாண்டமான மூச்சற்ற பரப்பில் நுழைந்து, மறைந்தது.
  • கோயில் கோபுரம் படிப்படியாக ஏறும் சுவர்க்கம்,
  • பக்தியால் எழும் ஆத்மாவின் சிற்பம்,
  • காண முடியாததைக் காண விழையும் கனவு.
  • அனந்தம் அழைக்கிறது; ஆத்ம எழுச்சி கனவிலாழ்கிறது,
  • உலகமெனும் மலையுச்சியை உயரும் கட்டடம் தொடும்.
  • விவரமான சிருஷ்டி ஆனந்தம் தரும்.
  • குரலழிந்த அமைதியின் பெருமையுள் கிளர்தெழுந்தது,
  • திரைமறைவிலுள்ள காலமழியும் புதிரை புவனம் மணந்தது.
  • ஏகன் ஏற்கும் ஏகப்பட்ட முறைகள்,
  • மூலத்தையடையும் முறையைக் காட்டும்.  
  • இயற்கையின் ஆழத்துள் நெடுநாளாய் இழந்த பிரம்மம்,
  • பூமியில் முளைத்து அனைத்துலகையும் அணைத்துப் பிடித்தது.
  • பெரியதின் சிறிய சுருக்கம்,
  • ஜீவனின் இலட்சியத்திற்கு இதுவே ஒரே படிக்கட்டு.
  • ஆத்மாவின் அளவுகட்குரிய சுருக்கம்,
  • பிரபஞ்ச நிர்வாகத்தின் பிழையற்ற பிரதி,
  • ஆத்ம சூழலில் ஏற்பட்ட இரகஸ்ய மறுபதிப்பு.
  • பிரபஞ்சத்தின் சூட்சும அமைப்பு,
  • உள்ளேயும், மேலேயும், ஆழத்திலும், மேலும் உள்ளது.
  • இயற்கையின் தெளிவு புலப்படும் செயல்,
  • மண்ணெனும் ஜடத்தின் மந்தமான உறக்கம் கலைகிறது.
  • சிந்தித்து, உணர்ந்து, குதூகலித்து,
  • தெய்வத்தை நம்முள் சிறப்பாக அமைத்து,
  • மனித மனத்தை விசாலமான சூழலுக்கு உயர்த்திற்று.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நேற்றிருந்த நிலையை மறந்து, இன்றுள்ள நிலையைப் பாராட்டுவது சமூகம். புதுப்பணக்காரனும், ஓய்வு பெற்ற ஆபீசரும் இதை உயர்வாகவும், தாழ்வாகவும் பெறுகிறார்கள். பிறர் மட்டுமல்லர், நாமும் நம்மை அது போல் நினைக்கிறோம். அதேபோல் மனிதன் தன்னை மனிதனாகக் கருதாமல் ஆன்மாவாகக் கருதவேண்டும்.
 
உள்ளதற்கே உயர்வு என்பதால்
மனிதனை ஆன்மாவாக அறிவோம்.



book | by Dr. Radut