Skip to Content

06. அஜெண்டா

அஜெண்டா

உயர்வதும் அகலுவதும் மனிதன் மூலத்துடன் சேரலாம் அல்லது தன்னை விரிவுபடுத்தலாம்.
இது மற்ற லோகங்கட்குரியதல்ல. பூமிக்கு மட்டும் உண்டு.

  • மானிடரைத் தேவரின் மேலவராக்குவது பூமா தேவி.
  • தெய்வம் இறைவனை நேரடியாக எட்ட முடியாது. எட்ட விரும்பினால் உலகில் மானுடனாகப் பிறக்க வேண்டும்.
  • அகலம், ஆழம் என்ற இரு பரிமாணங்கள் உண்டு. அகலம் உள்ளதை விரிவுபடுத்தும். ஆழம் மூலத்தையடைய உதவும்.
  • குடும்பத்தில் திறமையான இளைஞன் திறமையால் சாதிப்பவை எல்லாம் அவனைப் பிரபலமாக்கும்.
  • ஆழ்ந்து யோசனை செய்பவனுக்குத் திறமை இரண்டாம்பட்சம். அவனுக்கு முதற்காரணமாக தாயும் மகளும் நெருக்கமானவர். தகப்பனார் எப்படி ஆரம்பித்தாலும் முடிவில் தாயாரையே அனுசரிப்பார். தாயின் பிறப்பு எவ்வளவு பலம் வாய்ந்ததானாலும், பொது விஷயங்களில் தகப்பனார் தாயாரை அனுசரிக்க முடியாது. பொது விஷயங்களைக் கடந்து பல கட்டங்களைத் தாண்டினால் பிரம்மம் இறைவனாக வெளிப்படும். தகப்பனார் அங்கெல்லாம் தாயாரைக் கருத முடியாது. எனினும் தாய் அங்கும் இயற்கையாக எழுவாள். தகப்பனார் அதுபோன்ற ஒரு விஷயத்தில் இறைவனை-öயாட்டிச் செயல்பட விரும்பினால், அவர் மனம் அந்த நேரம் உள்ள விஷயத்தில் இறைவன் அம்சத்தை நாடும். உதாரணமாக நாட்டுக்குப் பொது மொழி தேவை என்பதில் தாயின் அபிப்பிராயம் செல்லாது. தகப்பனார் ஆங்கிலத்தை நினைத்தால், அவருள் உள்ள தாய் ஹிந்தியைக் கருதும். இதைக் காணும் இளைஞன் மூலத்திலும் மனிதன் தேடுவது சக்தியெனக் கண்டு சக்தி மூலம் மூலமான பிரம்மத்தை அடைவான்.
  • குடும்பம் சிறியதானாலும் சாரமான விஷயங்களில் அடிப்படையில் உயர்ந்தது. திறமை வளர்ந்தால்தான் பிரபலமாவான். பொறுப்பு வளர்ந்தால் மூலத்தை எட்ட முடியும். ஒரு ஆபீசில் கொடுத்த வேலையை மட்டும் செய்ய வேண்டும், பொறுப்பு எடுத்தால் பிற வேலைகளைக் கருத வேண்டும். ஆபீஸ் அதற்கு இடம் கொடுக்காது. ஆபீஸில் பொறுப்பு மனதளவில் இருக்கும். அதற்கு பிரமோஷன் வரும். பொறுப்பு பெரியதானால், ஒருவனுடைய பொறுப்புணர்ச்சிக்கு பிரமோஷன் உயர்ந்த சம்பள ஸ்கேலாக வரும்.
  • மனிதனுக்கு கடைசி வரையிலும், அதைக் கடந்தும், பெண் தேவை. முடிவாகத் தன்னுள் உள்ள பெண் அம்சம் தேவை. இதை வேதம் தெரிந்து அங்கு முடிவான கட்டத்தில் ஆபத்தை எச்சரித்தது. ஸ்ரீ அரவிந்தம் வேதம் சத்திய ஜீவியத்தைக் கண்டதை அறிந்தது. உபநிஷதம் அதை அறியுமென்றாலும், அதை முக்கியமாகக் கருதவில்லை. இன்று 30,000 வருஷங்கட்குமுன் சத்திய ஜீவியம் வரும் என்பது போல் அன்று 35,000 ஆண்டுகட்குமுன் வரும் என்பதும் உண்மை. குடும்பம் செழிக்க நல்ல மனைவி தேவை. ஆவது பெண்ணால் - அது ஆண் ஆண்ட காலம். பெண் ஆளும் காலம் வந்தால் அவள் எழுதுவது வேறு. துறவறம் முக்கியமானால் பெண் விலக்கப்பட வேண்டும். வேதம் கூறியது முழு வாழ்வு. அங்கு முடிவான கட்டத்தில் பெண்ணில் சிலர் ஆணுக்குத் தீங்கு செய்வார்கள். அது ஆண் தன்னை மட்டும் கருதும் உயர்ந்த - பரநிலை - நிலை. தன்னை மட்டும் கருதும் ஆணுக்குப் பெண் ஊறு செய்ய முடியும். அப்பரநிலையில் ஆண் முழுநிலையைக் - personality and impersonality - கருதினால் பிரபஞ்சத்தில் அன்னை, Mother’s personality எழுவார். அன்னையில் உள்ள பெண்மை ஆணுக்கு தீங்கு செய்யாது. ஆணின் பகுதியான பிரம்மத்தை முழுமையான பிரம்மமாக்கும். அப்பிரம்ம நிலை பிரபஞ்சத்திற்கும் அதைக் கடந்த பிரம்ம வாழ்விற்கும் உரியது. அங்கு bliss delight ஆகிறது. அசையாத தனிமனித ஆனந்தம் அசையும் பிரபஞ்ச ஆனந்தமாகி அதை ஒவ்வொருவருக்கும் தருகிறது. அது திருவுருமாற்றத்தாலும் பரிணாமத்தாலும் வருவது. புவியில் நடக்கும் சிறு செயலும் பிரம்மத்தில் முடிவு செய்யப்பட்டது என்பது Photo resolution முழுவதும் மனிதனை அப்பட்டமாகக் காண்பிப்பது போலாகும். காமிராவைப் பொறுத்து படம் விவரமான விளக்கமுடையதை resolution எடுத்துக் காட்டும்.

**************

ஸ்ரீ அரவிந்தசுடர்

தன்னை மனம் என அறியும் மனிதன் தான் ‘சத்திய ஜீவியம்’ என உணர வேண்டும். இளைஞனை குடும்பம் வளர்த்தது. வயதானபின் தான் இனியும் சிறுவனில்லை, முழு மனிதன் ‘இதுவரை என்னைக் காப்பாற்றிய குடும்பத்தை இனி நான் காப்பாற்ற வேண்டும்’ என அவன் உணர வேண்டும், சத்திய ஜீவியம் என்பதை வேதம் அறியும். அன்றிலிருந்து எவரும் அதையடைய நினைக்கவில்லை. மனிதன் பிரபஞ்சம் முழுவதும் பரவி, எதையும் செய்யும் வல்லமை பெற்று, பேரானந்தமடைந்து, தன்னை அறிவதே முழுமை. இதைச் சாதிப்பது திருவுருமாற்றம். சரணாகதியால் மட்டும் பெறக் கூடியது திருவுருமாற்றம். கெட்டதை விலக்குவது இயல்பு. கெட்டதை நல்லதாக மாற்றும் வழி உலகிலில்லை. இருளை ஒளியாக்குவது எப்படி? திருடனைத் தலைவனாக்குவது முடியுமா? கடன் சொத்தாக மாறுமா? மனம் சரணடைந்தால் கடன் சொத்தாகும். நம் மனத்தில் உள்ள கெட்ட எண்ணத்தை (உ.ம். பொறாமையை தாராளமானதாக மாற்ற) நல்ல எண்ணமாக மாற்றினால் திருவுருமாற்றம் புரியும். உடல் நிர்ப்பந்தம் செய்யும். தூங்க விரும்பினால் அதைத் தடுக்க முடியாது. உயிர், உயிரை எடுக்கும். நினைத்ததைச் செய்யாமலிருக்க நிமிஷம் அனுமதிக்காது. இப்படி எழுந்த வாழ்வு எளிமையாகவோ, ஆடம்பரமாகவோ இருக்கலாம். இதுவரை இருளிலிருந்து அருளுக்குப் பரிணாம வளர்ச்சி பெற்றது மாறி, இனி சிறிய அருள் பெரிய அருளாகும் நேரம் வந்ததை அறிய வேண்டும்.

உடல் செய்யும் ஆசனமும், உயிர் செய்யும் பிராணாயாமமும், மனம் செய்யும் தியானமும் விலகி உயர்ந்து, ஆத்மாவின் சரணாகதியாகி திருவுருமாற்றம் சித்திக்கும்.

*************



book | by Dr. Radut