Skip to Content

10. அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

தலைமீது அன்னையின் சாந்தி (Mother’s Force) மழையாகப் பொழிவது போல கற்பனை செய்தால், அதனால் உடல் நிறைவதாகவும், நோயுற்ற இடத்தில் சாந்தி அதிகமாகச் சேர்வதாகவும் கற்பனை செய்தால் நோய் குணமடையும். மூச்சுத்திணறல் உள்ளவர் இம்முறையைக் கையாண்டு வியாதி போனபின், அருவிபோல் தன் முயற்சி இல்லாமல் சாந்தம் தலைமேல் நிற்காமல் கொட்டி ஒரு சித்தி ஆகிவிட்டது. (அணூtடணூடிtடிண்) சுமார் 60 வயதில் மூட்டுக்கு மூட்டு வலி எடுத்து அளவுகடந்து தொந்தரவு வந்தபின், டாக்டர் கொடுத்த மருந்துடன் இந்த முறையையும் பின்பற்றியவர் முழுவதுமாகச் சில மாதங்களில் குணமானார். மயக்கம், வலிப்பு (fits) வந்த இளைஞருக்கு 5 ஆண்டுகளுக்கு டாக்டர் மருந்து எழுதிக் கொடுத்தபின் இந்தமுறை பூரண குணம் அளித்ததால், மருந்தை விட்டு விடலாமா, தொடருவதா என்ற ஐயம் ஏற்பட்டது. குணம் மருந்தால் வரவில்லை; சாந்தியால் வந்தது. மருந்து அவருடைய நம்பிக்கைக்காகச் சாப்பிட்டது. மருந்து குறுக்கே வந்திராவிட்டால் இன்னும் சீக்கிரமாகக் குணமாகியிருக்கும்.

மருந்தின்மீது நம்பிக்கையிருக்கும்வரை அதை விட வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னேன். உள்ளே வந்த சாந்தி, வியாதியைக் குணப்படுத்தியதுடன் அவர் தேட முனையாத நேரத்தில் ஒரு நல்ல வேலையையும் வாங்கிக் கொடுத்தது.

ஆசிரமத்தில் 2 மாதமாக தங்கியிருந்த அமெரிக்கர் தம் முதுகில் சுளுக்குப்போல் (sprain) வலிக்கிறதென்றார். தலைமீது சாந்தம் விழுந்து, அது உடலின் வழியாக வலியிருக்கும் இடத்தை அடைந்து, அங்கே சேர்வது போல் நினைத்தால் வலி கரையும் என்று சொன்னேன். அவர் மறுநாள் திரும்பி வந்து நீங்கள் சொன்னபடியே செய்தேன்; சாந்தம் வரவில்லை; விட்டுவிட்டேன். தானே, பிறகு கொஞ்சம் சாந்தம் வந்தது போலிருந்தது. ஆனால் வலி குறையவில்லை என்றார். அப்படியானால் மருந்து சாப்பிடுங்கள் என்றேன். மறுநாள் வந்தார். நான் மருந்து சாப்பிடவில்லை. ஆசிரமத்தில் சினிமா பார்க்கப் போனேன். பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது தலை சில் என்றிருந்தது; புரியவில்லை. உடல் எல்லாம் ‘சில்’ என்று குளிர்வதைப் போலிருந்தது. முதுகில் எதுவோ ஓடுவதைப்போல் உணர்வு ஏற்பட்டது. வலி இருக்கும் இடத்திற்குள் ஏதோ சென்று நிரம்புவதைப் போல் இருந்தது; ‘மடுக்’ என்ற சப்தம் கேட்டது. வலி திடீரென மறைந்து விட்டது என்றார். அவருக்கு சாந்தியை அழைக்கும் திறன் இல்லை. அவர் அழைத்தார், அது வரவில்லை. தன்னை மறந்திருந்த நேரம் அதுவாக வந்து வலியை விலக்கிவிட்டது.

எந்தப் பாகத்தில் வியாதி இருக்கின்றதோ அங்குச் சாந்தி சேர்வதைப் போல் நினைத்தால், அது சேர்வது தெரியும். சாந்திக்கு வியாதியைக் கரைக்கும் திறன் உண்டு. அதேபோல் ஒளிக்கும் அதே திறன் உண்டு. ஒளி தலைக்கு மேலிருந்து வருவதுபோல் நினைக்கலாம். ஹிருதயத்திருந்து வருவதுபோல் நினைப்பது சிறப்பு. எங்கிருந்து வந்தாலும் ஒளிக்கு நோயைக் குணப்படுத்தும் திறனுண்டு. தலை, கண், காது, வயிறு, கால், எலும்பு, எங்கு வியாதி இருந்தாலும் அவ்விடம் ஒளியால் நிரப்பப்படுவதாக நினைக்கும்பொழுது அது நினைவில் பலித்துவிட்டால், பிறகு நிஜமாகவே பலிக்கும். நோயின் அஸ்திவாரம் இருள். ஒளி இருளைப் போக்கும். அதனால் நோயைப் போக்கும். நோயின் அஸ்திவாரம் படபடப்பு. சாந்தம் படபடப்பைப் போக்கும். ஆகவே நோயை அழிக்கும் திறனுடையது.

மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், பிராணனுக்குரிய சக்கரம் (ஞிடச்டுணூச்) முதுகெலும்பில் நாபிக்கு பின்புறம் உள்ள இடத்தை ஒளியால் நிரப்பினால் (அல்லது சாந்தத்தால் நிரப்பினால்) அந்தச் சூட்சுமச் சக்கரம் நோயின் பிடியிலிருந்து விடுபடும்.

சக்கரம் பிராணனுக்கு மையமான இடம். அதற்கு விடுதலை கிடைத்தபின், நோய் கரைந்துவிடும்.

மஞ்சள்காமாலை ஏற்படுவது, கல்லீரல் சரியாக வேலை செய்யாததால். கல்லீரலில் ஒளி அபரிமிதமாகச் சேருவதாக நினைத்தால் நாளுக்கு நாள் வியாதி குறைவது தெரியும். ஈரல் உணர்ச்சிக்குக் கட்டுப்பட்டதென்பதால், உணர்ச்சிமயமான சக்கரம் ஹிருதயத்தின்பின் இருப்பதால், அதை ஒளியால் கற்பனையில் நிரப்பினால் ஈரல் சரியாகி, நோய் ஒழியும்.

நோயுள்ள இடத்திலோ, அதற்குரிய சக்கரத்திலோ ஒளி அல்லது சாந்தத்தை நிரப்பினால் நோயின் வேர் அற்றுப்போகும். அன்னையின் உருவம், ஸ்ரீ அரவிந்தர் உருவம் அங்குத் தென்பட்டால் நோய் முற்றிலும் குணமானதாக அர்த்தம்.

சூட்சும லோகம், ஸ்தூல உலகம் என இரு பிரிவுகள் இருப்பதால், செயல்கள் சூட்சுமத்தில் உற்பத்தியாகி, பின்னர் நம் கண்ணுக்குத் தெரியும் உலகில் நிகழ்கின்றன. சூட்சும லோகத்தில் கான்சர், காசநோய் இரண்டையும் அன்னை அழித்துவிட்டதாகச் சொல்கிறார். அதனால் சீக்கிரத்தில் மருத்துவ ஆராய்ச்சியில் இந்த நோய்களை அழிக்கும் மருந்துகள் கண்டுபிடிப்பார்கள். அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனை இந்த நோய் விஷயத்தில் அபரிமிதமாகப் பலிப்பதற்குக் காரணம் அவற்றின் சூட்சும வேர் அறுந்துபோனதே.

கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகள் மூலம் நோயைத் தீர்க்க அன்னை செயல்படும் முறைகளை விளக்க முயல்கிறேன்.

(தொடரும்)

***********

ஸ்ரீ அரவிந்த சுடர்

அணுவை அனந்தம் சிருஷ்டித்தாலும், அணுவுக்கு முழுமை ஏற்பட்டவுடன் அனந்தத்தை மறுக்கும்.

***********



book | by Dr. Radut